Home /News /sports /

நீங்க மெக்கல்லம்னா, நாங்க வெட்டோரி- ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம்

நீங்க மெக்கல்லம்னா, நாங்க வெட்டோரி- ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம்

வெட்டோரி

வெட்டோரி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளர்களாக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி மற்றும் ஆண்ட்ரே போரோவெக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை உறுதி செய்துள்ளது. வெட்டோரி மற்றும் போரோவெக் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

மேலும் படிக்கவும் ...

    ஆஸ்திரேலியா அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட டேனியல் வெட்டோரி, “இந்த ஆஸ்திரேலிய அணி வலுவான ஒற்றுமையான அணியாக உள்ளது. வெற்றிகரமான காலங்கள் நம் முன்னால் உள்ளன” என்று கூறியுள்ளார்.

    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் அதிரடி மன்னன், விக்கெட் கீப்பர், பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டதையடுத்து டேனியல் வெட்டோரியை நியமித்து கவுண்ட்டர் கொடுத்துள்ளதா ஆஸ்திரேலியா என்ற சந்தேகம் எழுகிறது.

    நியூசிலாந்திலிருந்து வந்த சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்று மதிப்பிடப்பட்ட வெட்டோரி, 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 113 டெஸ்ட் மற்றும் 295 ODIகளில் நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆர்சிபி அணியில் சப்போர்ட் ஸ்டாஃப் குழுவில் டேனியல் வெட்டோரி இருப்பதும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    டேனியல் வெட்டோரி ஒரு பர்பெக்ட் ஜெண்டில்மேன். நல்ல பணி நேர்மை மிக்கவர், நல்ல உத்திகளை வகுப்பவர் என்று பெயர் எடுத்தவர். கிரிக்கெட் நுணுக்கங்கள் பல அறிந்தவர் வெட்டோரி.

    நியூசிலாந்தின் சிறந்த கேப்டன் மார்ட்டின் குரோவ், ஆனால் அவருக்கு முன்பாக ஜெஃப் ஹவர்த், மார்டின் குரோவ் காலத்திலேயே ருதர்போர்டு ஆகியோர் சிறந்த கேப்டன்கள் என்பதை இன்றைய ஹீரோ வொர்ஷிப் கிரிக்கெட் ரசிகர்கள் அறிய வாய்ப்பில்லை, இவர்களெல்லாம் செஸ் காய்களை நகர்த்துவது போல் பீல்டிங் செட் அப் செய்பவர்கள். ஒரு ரன் எடுப்பதற்கு சிரமப்பட வேண்டும் அத்தகைய வழியில் வந்தவர் டேனியல் வெட்டோரி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Australia

    அடுத்த செய்தி