ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அஸ்வினை வைத்து மான்கட் முறையில் விக்கெட் எடுக்கலாம் - கலாய்த்த ஸ்டெயின்

அஸ்வினை வைத்து மான்கட் முறையில் விக்கெட் எடுக்கலாம் - கலாய்த்த ஸ்டெயின்

மான்கட்

மான்கட்

ஐபிஎல்-இல் ஆர்சர், பும்ரா, ரபாடா, இம்ரான் தாஹிர், அஸ்வின் ஆகியோர் ஒரே அணியில் இருந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஐபிஎல் தொடரில் மான்கட் முறையில் விக்கெட் எடுத்த அஸ்வினை கலாய்த்து பதிலளித்தார் டேல் ஸ்டெயின்.

  ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 25-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் பஞ்சாப் அணியின் அஸ்வின் அவுட்டாக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அஸ்வின் செய்தது தவறு என்று ஒரு சிலரும், அவர் செய்தது தவறு இல்லை என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  இந்தச் சம்பவம் நடத்து ஒரு மாதமாகிய நிலையில் தற்போது மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. பெங்களூரு அணியின் டேல் ஸ்டெயினிடம் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியில் ஐபிஎல்-ல் ஆர்சர், பும்ரா, ரபாடா, இம்ரான் தாஹிர், அஸ்வின் ஆகியோர் ஒரே அணியில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார்.

  அதற்கு பதிலளித்த டேல் ஸ்டெயின், ‘இவர்களை வைத்து விக்கெட்டுகளை இந்த மாதிரி எடுக்கலாம். ரபாடா-கேட்ச், இம்ரான் தாஹிர்-எல்பிடபிள்யு , அஷ்வின் - மான்கட் முறையில் விக்கெட்டுகளை எடுக்கலாம் என்று கூறினார்.

  ஃபோட்டோவை கிழித்த ஆண்டர்சன்... பதிலடி கொடுத்த அஸ்வின்!

  VIRAL VIDEO: மான்கட் முறையில் விக்கெட் எடுக்க முயன்ற அஸ்வினை கலாய்த்த தவான்

  Also watch

  Published by:Prabhu Venkat
  First published:

  Tags: IPL 2019, R Ashwin