ICC World Cup 2019 | உலகக் கோப்பை தொடரிலிருந்து ஸ்டெயின் விலகல்! - ரசிகர்கள் அதிர்ச்சி

#IndiavSouthAfrica | #DaleSteyn | ஐபிஎல் தொடரின் போது  தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்னுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

ICC World Cup 2019 | உலகக் கோப்பை தொடரிலிருந்து ஸ்டெயின் விலகல்! - ரசிகர்கள் அதிர்ச்சி
டேல் ஸ்டெயின்
  • News18
  • Last Updated: June 4, 2019, 5:04 PM IST
  • Share this:
உலகக் கோப்பை தொடரிலிருந்து தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் விலகி உள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் முதல் போட்டியை நிறைவு செய்துள்ள நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை நாளை எதிர்கொள்ள உள்ளது.

உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க தென்னாப்பிரிக்கா அணி தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளது.


ஐபிஎல் தொடரின் போது  தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்னுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உலகக் கோப்பை தொடரின்  முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.

இந்நிலையில் நாளை இந்தியாவுடனான போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் முழுவதும் குணமடையாததால் ஸ்டெயின் உலகக்கோப்பை தொடரிலிந்து விலகி உள்ளார்.  ஸ்டெயின் விலகியுள்ளது அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடவை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டெயின் விலகியதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக ஹென்ட்ரிக்ஸ் அணியில் இடம்பிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
First published: June 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading