Dale Steyn: கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் டேல் ஸ்டெய்ன்: ஓய்வு அறிவிப்பு

டேல் ஸ்டெய்ன் ஓய்வு பெற்றார்.

தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிரியாவிடை கொடுத்து ஓய்வு அறிவித்தார் தென் ஆப்பிரிக்க லெஜண்ட் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன்.

  • Share this:
    அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார் டேல் ஸ்டெய்ன். இவர் 93 டெஸ்ட் போட்டிகள், 125 ஒருநாள் போட்டிகள், 47 டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் ஏராளமான ஐபிஎல் போட்டிகள், தனியார் டி20 லீகுகளில் ஆடியுள்ளார் டேல் ஸ்டெய்ன்.

    அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 699 விக்கெட்டுகளை வீழ்த்திய டேல் ஸ்டெய்ன் பவுலர்கள் லிஸ்ட்டில் 15வது இடத்தில் உள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இவர்தான் தென் ஆப்பிரிக்காவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐசிசியின் பத்தாண்டுகளின் சிறந்த டெஸ்ட் அணியில் டேல் ஸ்டெய்ன் இடம்பெற்றிருந்தார்.

    கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஸ்டெய்ன்.


    “பயிற்சிகள், மேட்ச்கள், பயணங்கள், வெற்றிகள், தோல்விகள், பேண்டேஜ் போட்ட கால்கள், ஜெட்லாக், மகிழ்ச்சி, சகோதரத்துவம், ஆகியவை அடங்கிய 20 ஆண்டுகால கிரிக்கெட். ஏகப்பட்ட நினைவுகள். ஏகப்பட்ட முகங்களுக்கு நன்றி கூற வேண்டியுள்ளது. எனவே நிபுணர்கள் தொகுத்துக் கூறட்டும், இன்று நான் காதலித்த கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். இனிய கசப்பு அல்லது கசந்த இனிப்பு என்ன செய்வது? குடும்பம் முதல் அணி சக வீரர்கள் வரை, பத்திரிகையாளர்கள், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றி, நம்ப முடியாத ஒரு பயணம்” என்று சமூக ஊடகத்தில் உருக்கமாகக் கூறியுள்ளார் டேல் ஸ்டெய்ன்.

    Also Read: நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால்...- சச்சின் ஸ்னேகிதன் வினோத் காம்ப்ளி  'கமெண்ட்'

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டேல் ஸ்டெய்ன் ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளையும் டி20-யில் 64 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

    அதிவிரைவில் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியதில் இவரது சாதனை நம்பர் 1 இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்காக டிசம்பர் 17,2004-ல் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    டேல் ஸ்டெய்ன் எல்லா நாடுகளிலும் எல்லா கண்டிஷன்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஓடி வந்து அந்த ரிதமுடன் வீசி பந்தை ஸ்விங் செய்யும் அழகை மறக்கவும் முடியுமோ?
    Published by:Muthukumar
    First published: