ஐபிஎல் விளையாடினால் கிரிக்கெட் மறந்து விடும்; பாகிஸ்தான் சூப்பர் லீக் ‘சூப்பர்’- டேல் ஸ்டெய்ன் திடீர் விமர்சனம்

டேல் ஸ்டெய்ன்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிரச்சனை என்னவெனில் பெரிய அணிகளாக இருக்கின்றன, பெரிய பெயர்கள், நட்சத்திரங்கள், எவ்வளவு பணத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டனர், என்ன சம்பாத்தியம், எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் இப்படித்தான் அங்கு நிலைமை உள்ளது. இதனால் கிரிக்கெட் மறக்கப்படுகிறது.

 • Share this:
  ஐபிஎல் கிரிக்கெட்டை தான் துறந்ததற்குக் காரணம் பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் ஆகியவை கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்று தென் ஆப்பிரிக்க ஒரு காலத்திய வேகப்புயல் டேல் ஸ்டெய்ன் ஒரே போடு போட்டுள்ளார்.

  தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஆடுகிறார் டேல் ஸ்டெய்ன். இது தொடர்பாக கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு டேல் ஸ்டெய்ன் கூறும்போது, “ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்க முடிவெடுத்தேன். மற்ற லீகுகளில் ஆடுவது ஒரு வீரராக பயனளிக்கிறது.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிரச்சனை என்னவெனில் பெரிய அணிகளாக இருக்கின்றன, பெரிய பெயர்கள், நட்சத்திரங்கள், எவ்வளவு பணத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டனர், என்ன சம்பாத்தியம், எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் இப்படித்தான் அங்கு நிலைமை உள்ளது. இதனால் கிரிக்கெட் மறக்கப்படுகிறது.

  பாகிஸ்தான் சூப்பர் லீக், ஸ்ரீலங்கா பிரிமியர் லீகில் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

  ஐபிஎல் ஆடினால் கிரிக்கெட் மறந்து விடும். அங்கு பேசப்படும் விஷயமே இந்த ஐபிஎல்-ல் எவ்வளவு பணம் கிடைக்கும் எந்தத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டோம் இதே பேச்சாகத்தான் இருக்கும். இதை நான் மிகவும் கறாரான நேர்மையுடன் கூறுகிறேன். அதனால் அதிலிருந்து விலக முடிவெடுத்தேன். ஆகவே கிரிக்கெட்டுக்கு மதிப்பு சேர்க்கும் தொடர்களில் சில பாசிட்டிவ் ஆன அம்சங்களைக் கொண்டு சேர்க்க விரும்புகிறேன்” என்றார்.

  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இவரை ரூ.9.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. 50 விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களில் டேல் ஸ்டெய்ன் மிகவும் சிக்கனமான ஐபிஎல் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 97 ஐபிஎல் விக்கெட்டுகளை 6.91 என்று சிக்கன விகிதம் வைத்துள்ளார்.

  இந்நிலையில் ஐபிஎல் மீதான இவரது விமர்சனம் நிச்சயம் சர்ச்சைகளைக் கிளப்பும். ஐபிஎல் முதல் தொடருக்கு முன்பு இவர் கூறிய கருத்தும் சர்ச்சையானது. என்ன ஒரு டூர் போயிட்டு வருவோம் என்பது போல் அப்போது அவர் கருத்து தெரிவித்து பிறகு மன்னிப்புக் கேட்டார்.

  ஆனால் ஐபிஎல் தொடரில் ஆடிய பிறகு இவரது விமர்சனத்தில் உண்மை இருக்கலாம். ஏனெனில் ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட பாலிவுட் ஷோ போன்றது அல்லது பிக் பாஸ் போன்ற ரியால்டி ஷோ போன்ற நிலைக்குச் சென்று விட்டது என்ற  விமர்சனங்களையும் ஐபிஎல் தற்போது எதிர்கொண்டு வருகிறது.
  Published by:Muthukumar
  First published: