• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியா-ஆஸி. டி-20 நடந்த ஸ்டேடியத்தில் `டெல்டாவை காப்பாற்றுங்கள்’ பேனர் பிடித்த தமிழர்கள்!

இந்தியா-ஆஸி. டி-20 நடந்த ஸ்டேடியத்தில் `டெல்டாவை காப்பாற்றுங்கள்’ பேனர் பிடித்த தமிழர்கள்!

சிட்னியில் டெல்டாவிற்கு ஆதரவு தெரிவித்த தமிழர்கள் (Twitter)

சிட்னியில் டெல்டாவிற்கு ஆதரவு தெரிவித்த தமிழர்கள் (Twitter)

#CycloneKaja: Save Delta Banner In India Vs Australia 3rd T20I Sydney | கஜா புயலால் உருக்குலைந்துள்ள டெல்டா மாவட்டங்கள் மீது மக்களின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காக பதாகைகளுடன் திரண்ட தமிழக ரசிகர்கள். #SaveDelta

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டி-20 போட்டி நடைபெற்ற சிட்னியில் மைதானத்தில், கஜா புயால் கடுமையாக பாதிக்கப்பட்ட `டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகைகளை காட்டினர். அந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சிட்னி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி நடைபெற்றது. இதில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது.

    டெல்டாவிற்காக குரல்கொடுக்கும் ஆஸ்திரேலிய தமிழர்கள்!

    3-வது டி-20 போட்டியை காண சிட்னி மைதானத்திற்கு வந்த ரசிகர்களில் சிலர் “Save Delta, Save Tamil Nadu Farmers, Gaja Cyclone Relief” என்ற எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு நின்றுகொண்டிருந்தனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



    ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வெளிநாடுகளில் வாழும் ஏராளமான தமிழ் மக்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்கள் மீது மக்களின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காக சிட்னி மைதானத்தில் இந்தப் பதாகைகளுடன் தமிழக ரசிகர்கள் வந்துள்ளனர்.

    இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு மீம்ஸ்களும் வலம் வருகின்றன.











    மேலும் பார்க்க...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: