Home /News /sports /

இந்திய மகளிர் அணியினர் பேட்டிங் படுமோசம்:  அசாருதீன் கடும் தாக்கு

இந்திய மகளிர் அணியினர் பேட்டிங் படுமோசம்:  அசாருதீன் கடும் தாக்கு

அசாருதீன்

அசாருதீன்

பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதியில் ஆஸ்திரேலியாவை வென்று தங்கப்பதக்கத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டிய இந்திய அணி மடத்தனமாக பேட் செய்து தங்கத்தைக் கோட்டை விட்டனர் என்று இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சாடியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதியில் ஆஸ்திரேலியாவை வென்று தங்கப்பதக்கத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டிய இந்திய அணி மடத்தனமாக பேட் செய்து தங்கத்தைக் கோட்டை விட்டனர் என்று இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சாடியுள்ளார்.

    9 ரன்களில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. 118/2 என்பதிலிருந்து 152 ரன்களுக்கு சுருண்டு தோல்வி கண்டது இந்திய அணி. இதன் மூலம் தங்கம் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்குச் செல்ல இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    இதனையடுத்து முகமது அசாருதீன் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:



    அதாவது, “இந்திய அணியின் மோசமான பேட்டிங், மடத்தனமாக ஆடியது. வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு தாரை வார்த்தது” என்று சாடியுள்ளார்.

    ஹர்மன்பிரித் கவுர் (65) ஜெரிமையா ரோட்ரிக்ஸ் அபாரமாக ஆடி 96 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஆனால் ஜெரிமையா ரோட்ரிக்ஸ் 33 ரன்களில் மெகன் ஷட்டிடம் பவுல்டு ஆனார். அடுத்து பூஜா வத்ஸ்ராக்கர் (1), ஹர்மன்பிரீத் கவுர் (65) ஆகியோரும் ஆட்டமிழந்தனர்.

    கடைசியில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ஜெஸ் ஜொனாசன் அருமையாக வீசி மீதமிருந்த 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

    முகமது அசாருதீன் மகளிர் கிரிக்கெட்டை சாட, ரவி சாஸ்திரியோ, அந்த மகளிர் அணி மீது கருணையுடன் கருத்துக் கூறுகையில், “வெல் டன், இறுதிப் போட்டியில் செம தைரியம்” என்று பாராட்டியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Commonwealth Games, Cricket

    அடுத்த செய்தி