முகப்பு /செய்தி /விளையாட்டு / காமன்வெல்த் கிரிக்கெட்: வெள்ளிப்பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி வரலாறு

காமன்வெல்த் கிரிக்கெட்: வெள்ளிப்பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி வரலாறு

காமன்வெல்த் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி வெள்ளி

காமன்வெல்த் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி வெள்ளி

பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்ததாலும் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது, ஆஸ்திரேலியா மகளிர் அணி  முதல் காமன்வெல்த் கிரிக்கெட் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Birmingham | England

பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்ததாலும் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது, ஆஸ்திரேலியா மகளிர் அணி  முதல் காமன்வெல்த் கிரிக்கெட் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ஜெரிமையா ரோட்ரிக்ச் 33 ரன்கல் எடுத்தார், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 43 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்தும் கடைசி 8 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு இழந்து 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு சுருண்டு தோல்வி கண்டது. 14.2 ஓவர்களி 118/2 என்று இருந்த இந்திய அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி வெள்ளியுடன் முடிந்தது.

India's lower-order caved in meekly to get all out for 152 in 19.3 overs.

கவுர் மற்றும் ரோட்ரிக்ஸ் இணைந்து மேட்சையே திருப்பிய 96 ரன்கள் கூட்டணி அமைத்தனர். கவுர் விளாச, ரோட்ரிக்ஸ் அவருக்கு உறுதுணையாக ஆடினார். ரோட்ரிக்ஸ் தன் இன்னிங்சில் 3 பவுண்டரிகளை அடித்தார். ஆனால் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வலுவானது, எந்த நிலையிலிருந்தும் வெல்லக் கூடியது. முதல் போட்டியில் 88/5 என்ற நிலையிலிருந்து 158 ரன்கள் இலக்கை விரட்டி வென்றது, பிறகு நேற்று இந்திய அணி 118/2 என்ற நிலையில் இருந்த போது அடுத்தடுத்து கவுர், ரோட்ரிக்சை வீழ்த்தி ஆட்டத்துக்குள் நுழைந்தது.121/5 என்ற நிலையில் ஆஸ்திரேலியா 2 ரன் அவுட்களையும் அசாதாரண பீல்டிங்கில் செய்தது.

ஆனாலும் இந்தியாவுக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஜெஸ் ஜொனாசன் சிறப்பாக வீசினார், யாதிகாவை எல்பி முறையில் வீழ்த்த இந்தியா 152 ரன்களுக்குச் சுருண்டு வெள்ளியுடன் முடிந்தது.

தொடக்கத்தில் நல்ல பார்மில் இருக்கும் ஸ்மிரிதி மந்தனா விக்கெட்டை விரைவில் இழந்தனர். 6 ரன்களில் பவுல்டு ஆனார். தைரிய வீராங்கனை ஷஃபாலி வர்மா 11 ரன்களில் வெளியேறினார்.

After 9-run defeat, India women's cricket team settled for the silver medal in 2022 Commonwealth Games

முன்னதாக ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா அணியில் பெத் மூனி அதிகபட்சமாக 61 ரன்களை எடுத்தார். லேனிங் 36 ரன்கள் பங்களிப்பு செய்தார். இந்தியா மகளிர் அணியின் பீல்டிங் அபாரமாக இருந்தது லேனிங்கை ரன் அவுட் செய்தனர், தஹிலா மெக்ராத்துக்கு யாதவ் அருமையான கேட்ச் எடுத்தார். மூனிக்கு தீப்தி சர்மா பின்னாலேயே சென்று ஒரு கையில் அசத்தலான கேட்சை எடுத்தார். ரேனுகா சிங் 11 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

top videos

    இந்திய மகளிர் அணி தங்கம் வெல்ல போராடியது, ஆனால் ஆஸ்திரேலியா பதற்றமான தருணங்களில் வென்று தங்கம் வெல்ல இந்திய மகளிர் அணி காமன்வெல்த் போட்டிகளில் முதன் முதலாக கிரிக்கெட் அறிமுகம் ஆன தொடரில் வெள்ளி வென்று வரலாறு படைத்தது.

    First published:

    Tags: Commonwealth Games, Indian women cricket, Medal winners