முகப்பு /செய்தி /விளையாட்டு / 32 பந்துகள் 1 ரன் 7 விக்கெட்... ஆஸ்திரேலியாவை கதறவிட்ட கிரிக்கெட் ஜாம்பவான் பவுலர்

32 பந்துகள் 1 ரன் 7 விக்கெட்... ஆஸ்திரேலியாவை கதறவிட்ட கிரிக்கெட் ஜாம்பவான் பவுலர்

கர்ட்லி ஆம்ப்ரோஸ்

கர்ட்லி ஆம்ப்ரோஸ்

1993 ஆம் ஆண்டு பெர்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் ஆம்ப்ரோஸ் மொத்தமாக 9 விக்கெட்களை வீழ்த்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரிக்கெட்டில பல போட்டிகள் எப்போதும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். பழைய போட்டியாக இருந்தாலும் அந்த வீடியோகளை நாம் திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருப்போம். உதாரணமாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனி ஒருவராக இந்திய அணியை வெற்றி பெற வைப்பார். இந்த போட்டியின் வீடியோ இதுவரை இணையத்தில் வைரலாகவே உள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் அந்த போட்டியின் வீடியோ சலிப்பை ஏற்படுத்தாது. இதுப்போன்று கிரிக்கெட்டில் பல சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.

அப்படி வரலாற்றில் மறக்க முடியாத போட்டி ஒன்று தான் மேற்கிந்திய தீவுகள் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி. இந்த போட்டியில் மேற்கிந்திய பந்துவீச்சாளர் கர்ட்லி ஆம்ப்ரோஸ் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை தனது அசாத்திய பந்துவீச்சால் நடுங்க விட்டார். 1993 ஆம் ஆண்டு பெர்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் ஆம்ப்ரோஸ் மொத்தமாக 9 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 58 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்த போது ஆம்ப்ரோஸ் தனது விக்கெட் வேட்டையை ஆரம்பித்தார். சீட்டு கட்டுகள் அடுத்தடுத்து விழுவது போல அடுத்தடுத்து தனது அசாத்திய பந்துவீச்சில் 7 விக்கெட்களை வீழ்த்தினார். ஆம்ப்ரோஸ் விக்கெட் வேட்டையை ஆரம்பித்த உடன் 32 பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார். மொத்தமாக முதல் இன்னிங்சில் 18 ஓவர்கள் வீசி 25 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டை வீழ்த்தினா். பல வருடங்களை கடந்தும் இந்த போட்டி கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக உள்ளது.

ஆம்ப்ரோஸின் அற்புதமான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் 322 ரன்கள் எடுத்தது. 203 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கிய போது 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

First published:

Tags: Cricket