முக்கிய வீரர் விலகல்... சி.எஸ்.கே அணிக்கு பின்னடைவா?

#CSK's #AllRounder pulls out of IPL for family reasons | சேப்பாக்கத்தில் நாளை நடைபெற இருக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

news18
Updated: March 30, 2019, 3:07 PM IST
முக்கிய வீரர் விலகல்... சி.எஸ்.கே அணிக்கு பின்னடைவா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)
news18
Updated: March 30, 2019, 3:07 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சீசனில் களமிறங்கிய முக்கியமான ஆல்ரவுண்டர், சொந்தக் காரணங்களுக்காக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது.

CSK, MS Dhoni
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.


சேப்பாக்கத்தில் நாளை நடைபெற இருக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே, முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சி.எஸ்.கே 3-வது போட்டியிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லே (29), சொந்தக் காரணங்களுக்காக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டேவிட் வில்லேவின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

David Willey, டேவிட் வில்லே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லே. (CSK)
Loading...
ஏற்கனவே, தென்னாப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி காயத்தால் விளையாட முடியாத நிலையில், தற்போது டேவிட் வில்லேயும் விலகியது சென்னை அணிக்கு பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பரிதாபங்கள்... 2 வீரர்கள் சதமடித்தும் தோல்வி!

7 பந்துகளில் தொடர்ந்து 7 சிக்ஸர்கள்... யுவராஜ் சிங்கின் சாதனையை தகர்த்தெறிந்த மும்பை வீரர்!

தமிழ் மக்களுக்காக எனது முதல் கானா பாட்டு... இது சும்மா டிரெய்லர் தான்மா..!

VIDEO | மொக்கை வாங்கிய சாக்‌ஷி தோனி... சரியாகச் சொன்ன ஜடேஜா... வயிறு வலிக்க சிரித்த வீரர்கள்...!

Also Watch...First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...