#CSKvRCB | கிங் கோலி படையை துவம்சம் செய்த சிங்...!

#IPL2019: #CSK won the toss choose to bowl | பெங்களூரு அணியின் முக்கிய மூன்று விக்கெட்களை ஹர்பஜன் சிங் சாய்த்ததால் அந்த அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது.

Web Desk | news18
Updated: March 23, 2019, 9:05 PM IST
#CSKvRCB | கிங் கோலி படையை துவம்சம் செய்த சிங்...!
#IPL2019: #CSK won the toss choose to bowl | பெங்களூரு அணியின் முக்கிய மூன்று விக்கெட்களை ஹர்பஜன் சிங் சாய்த்ததால் அந்த அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது.
Web Desk | news18
Updated: March 23, 2019, 9:05 PM IST
சென்னை சேப்பாக்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு அணி முக்கியமான 3 விக்கெட்களை பறிக்கொடுத்தது.

ஐ.பி.எல் தொடரின் தொடக்க போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதை தொடர்ந்து பெங்களூரு அணியின் தெடாக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல் களமிறங்கினார்கள்.

பெங்களூரு அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 6 ரன்களில் ஹர்பஜன் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலியும், தென்னாப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் இருவரும் ஹர்பஜன் பந்துவீச்சில் சிக்கினார்கள்.

பெங்களூரு அணியின் முக்கிய மூன்று விக்கெட்களை ஹர்பஜன் சிங் சாய்த்ததால் அந்த அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. இறுதியாக ஹர்பஜன் சிங் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

தற்போது வரை பெங்களூர் அணி 13 ஓவர்களில் 59 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

Also Watch...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...