உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பத்துக்கு CSK அணி உதவி!

எம்.எஸ்.தோனி. (CSK)

#CSK Helps To #Pulwama #bravehearts | கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் 5 சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி செய்யப்பட்டது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது.

  2019-ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) டி-20 கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 23) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.

  முதற்கட்டமாக முதலிரண்டு வாரங்களில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், மே 5-ம் தேதி வரை நடைபெறும் ஒட்டுமொத்த லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணையை ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டது.

  MS Dhoni, தோனி
  சேப்பாக்கத்தில் தோனி. (CSK)


  சென்னையில் நடைபெறும் தொடக்க போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதனை முன்னிட்டு சென்னை அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

  இந்நிலையில், சென்னை அணியின் சொந்த மண்ணான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் கிடைத்த பணத்தை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  முன்னதாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் 5 சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி செய்யப்பட்டது.

  பேட்ட ஸ்டைலில் தோனிக்கு 3டி மோஷன் போஸ்டர்.. CSK ரசிகர்கள் கொண்டாட்டம்!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: