20 ராணுவ வீரர்கள் வீரமரணம் குறித்து சர்ச்சை கருத்து... அணி மருத்துவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த சி.எஸ்.கே

சீன ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்நத 20 இந்திய ராணுவர்களின் வீரமரணம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அணி மருத்துவரை சி.எஸ்.கே சஸ்பெண்ட் செய்துள்ளது.

20 ராணுவ வீரர்கள் வீரமரணம் குறித்து சர்ச்சை கருத்து... அணி மருத்துவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த சி.எஸ்.கே
சி.எஸ்.கே
  • Share this:
ராணுவ வீரர்களின் வீரமரணம் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட அணி மருத்துவரை சஸ்பெண்ட் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்.

லடாக் எல்லைப்பகுதியில் சீனா ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் பழனி உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்திற்கு பிரதமர் மோடி உட்பட பலர் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

இதனிடையே ராணுவ வீரர்களின் உயிரிழப்பை தொடர்ந்து சி.எஸ்.கே அணியின் மருத்துவர் மது தொட்டப்பில்லில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்கும் வகையில் சர்ச்சையான கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். “அதில் இறந்த ராணுவ வீரர்களின் உடல் வைக்கப்பட்டிருக்கும் சவப்பெட்டிகளில் பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்குமா? என்பதை பார்க்க விரும்புகிறேன்“ என்று பதிவிட்டிருந்தார். ஆனால் அதனை சிறிது நேரத்தில் ட்விட்டரில் இருந்து நீக்கி விட்டார்.


மது தொட்டப்பில்லின் சர்ச்சையான கருத்தை தொடர்ந்து அணி மருத்துவர் பதவியிலிருந்து சி.எஸ்.கே சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் அவரின் தனிப்பட்ட கருத்து சி.எஸ்.கே அணி நிர்வாகத்திற்கு தெரியவில்லை. அவரின் கருத்திற்காக நாங்கள் வருந்துகிறோம் என்றுள்ளனர்.

சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ராணுவத்தில் கௌரவ லெப்டினெண்ட்டாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading