சிஎஸ்கேவின் அடுத்த பினிஷர் இவர்தான்? தோனியே பார்த்து அசந்து போன தமிழக வீரர்
சிஎஸ்கேவின் அடுத்த பினிஷர் இவர்தான்? தோனியே பார்த்து அசந்து போன தமிழக வீரர்
தோனி-ஷாரூக்கான்
சென்னை சூப்பர் கிங்ஸ் தன் டிவிட்டர் பக்கத்தில், ““Fini SEE ing off in sty7e!” என்று ஒரு கிரேட் பினிஷர் இன்னொரு எதிர்கால பினிஷரைப் பார்க்கிறார் என்ற தொனியில் பதிவிட்டதை ரசிகர்கள் தாறுமாறாக வரவேற்றுள்ளனர்.
சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகாவுக்கு எதிராக கடைசி ஓவரில் 16 ரன்கள் வெற்றிக்குத் தேவை எனும்போது ஸ்கொயர்லெக்கில் பெரிய சிக்சரை விளாசி அபாரமாக முடித்த ஷாரூக்கான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த பினிஷராக இருப்பார் என்று ரசிகர்கள் வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
ஷாரூக்கான் 15 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் நாட் அவுட் என்று அபாரமாக பினிஷ் செய்தார். தமிழ்நாடு அணி தொடர்ந்து 2ம் முறையாக சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை வென்றது. கிரிக்கெட் உலகம் தமிழ்நாடு அணியை இதற்காக கொண்டாடி வரும் வேளையில் சிஎஸ்கே அணி தன் ட்விட்டர் பகக்த்தில் ஷாரூக்கானின் அபார பினிஷிங்கை தோனி பார்க்கும் படத்தை பகிர்ந்ததை ரசிகர்கள் பகிர்ந்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், ““Fini SEE ing off in sty7e!” என்று ஒரு கிரேட் பினிஷர் இன்னொரு எதிர்கால பினிஷரைப் பார்க்கிறார் என்ற தொனியில் பதிவிட்டதை ரசிகர்கள் தாறுமாறாக வரவேற்றுள்ளனர். இந்தப் படத்தை பகிர்ந்தவுடன் ரசிகர்கள் 2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே நிச்சயம் ஷாரூக்கானை அணியில் எடுக்கும் அவர்தான் அடுத்த பினிஷர் என்ற ரீதியில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். வரும் ஐபிஎல் ஏலத்தில் ஷாரூக்கான் ஒரு மையமான கவன ஈர்ப்பாக இருப்பார் என்று நம்பலாம்.
தோனி ஷாரூக்கான் பினிஷிங்கைப்பார்ப்பது போல் உள்ள ட்வீட் தொடர்கள் இதோ:
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 22, 2021
கர்நாடகா அணி முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டு 151/7 என்று முடிய, தொடர்ந்து ஆடிய தமிழ்நாடு அணி கடைசி பந்தில் அடித்த சிக்ஸ் மூலம் 153/6 என்று வெற்றி பெற்றது.
20-வது ஓவரில் வெற்றிபெற 16 ரன்கள் தேவைப்பட்டது. ஷாரூக்கான் ஏற்கெனவே 12 பந்தில் 24 என்று அபாரமாக ஆடியிருந்தார். கடைசி ஓவரை கர்நாடகா பவுலர் பிரதீக் ஜெயின் வீசினார், இவர் 3 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் கடைசி ஓவரில் முதல் பந்தை வீச சாய் கிஷோர் பவுண்டரி விளாசினார். பிறகு வைடு ஒன்று சாய் கிஷோர், சிங்கிள், ஷாரூக்கான் சிங்கிள் என்று சிங்கிளாக வந்தது, இரண்டு வைடுகளையும் ஜெயின் வீசினார், 5வது பந்தில் 2 ரன்களை ஷாரூக்கான் எடுத்தார், கடைசி பந்தில் 4 எடுத்தால் டை, சிக்ஸ் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷாரூக்கான் ஸ்கொயர் லெக்கில் பெரிய சிக்சை அடித்து ஹீரோவானார்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.