VIDEO: சி.எஸ்.கே. பயிற்சி போட்டி... 29 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய ரெய்னா!

#CSK Relesed #ChinnaThala #SureshRaina innings from the Practice Match | சுமார் 12 ஆயிரம் ரசிகர்கள் சென்னை அணியின் பயிற்சிப் போட்டியை கண்டு ரசித்தனர்.

VIDEO: சி.எஸ்.கே. பயிற்சி போட்டி... 29 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய ரெய்னா!
சுரேஷ் ரெய்னா. (BCCI)
  • News18
  • Last Updated: March 18, 2019, 5:52 PM IST
  • Share this:
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தின்போது சுரேஷ் ரெய்னா 29 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

2019 ஐ.பி.எல் தொடர் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

இதனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு அணியாக பிரிக்கப்பட்டு டி-20 பயிற்சி போட்டி நேற்று (மார்ச் 17) நடத்தப்பட்டது.


Murali Vijay, முரளி விஜய்
பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கிய முரளி விஜய். (CSK)


இந்தப் போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் 12 ஆயிரம் ரசிகர்கள் சென்னை அணியின் பயிற்சிப் போட்டியை கண்டு ரசித்தனர். பயிற்சி போட்டியில் சுரேஷ் ரெய்னா 3-வது வீரராக களமிறங்கினார்.



29 பந்துகளை எதிர்கொண்ட அவர், 6 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உள்பட 56 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ரெய்னா விளையாடிய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.



சிக்சர் மழை பொழிந்த ரெய்னாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

#IPL2019: ஏலம் எடுக்காததால் காணாமல் போன தமிழக வீரர்கள்!

சி.எஸ்.கே பயிற்சி ஆட்டம்: சேப்பாக்கத்தில் குவிந்த 12,000 ரசிகர்கள்!


Also Watch...

First published: March 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்