Home /News /sports /

தோனி சொன்ன விஷயங்கள்...! சி.எஸ்.கே அணியில் விளையாட உள்ள சாய் கிஷோர் நேர்காணல்

தோனி சொன்ன விஷயங்கள்...! சி.எஸ்.கே அணியில் விளையாட உள்ள சாய் கிஷோர் நேர்காணல்

தோனி உடன் சாய் கிஷோர்

தோனி உடன் சாய் கிஷோர்

IPL 2019 |

  • News18
  • Last Updated :
அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது சீசனுக்கான ஏலத்தில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 லட்ச ரூபாய்க்கு எடுத்தது. இதன் மூலம் சாய் கிஷோர் முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறார்.

சாய் கிஷோர் நியூஸ் 18-க்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:-

சின்ன வயதிலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்த்து பார்த்து வளர்ந்தவன் நான். இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட இருப்பது பெருமையாக இருக்கிறது. கேப்டன் தோனி தலைமையில் விளையாட இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியான ஒன்று. நிச்சயம் என்னுடைய முழு பங்களிப்பையும் அணிக்காக கொடுக்க இருக்கிறேன். களத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது என்னுடைய திறமையை நிச்சயம் நிரூபிப்பேன்.

நான் நினைத்ததெல்லாம் நடக்கிறதா என்று தெரியவில்லை
இன்று வெற்றி பெறலாம் நாளை தோல்வி அடையலாம்.
எனவே நிலையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் எனவே நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் கடினமாக உழைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்

தோனி அவர்களோடு கடந்த காலங்களில் பயிற்சி எடுத்தது பெரிய அனுபவத்தை கொடுத்தது. அப்பொழுது அவர் சொன்ன விஷயங்கள் ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயமாக என் திறனை காட்டுவேன்.

கடந்த முறை ஏலத்தில் எடுத்த பொழுது இதுதான் கடைசி என்று நான் நினைக்கவில்லை. தற்போதும் அப்படித்தான்.,  சென்னை மக்களுக்கு கிரிக்கெட், சிஎஸ்கே தான் உயிர்.

படிக்கும் பொழுது நான்தான் ஸ்கூல் டாப்பர். ஆனால், எட்டாம் வகுப்பிற்கு பிறகு கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்தும் என் பாதை மாறியது. 12-ம் வகுப்பிற்கு பிறகு கிரிக்கெட் தான் எல்லாம் என்று முடிவு செய்தேன்.

சின்ன வயதில் கங்குலி, சச்சினை பார்க்கும்பொழுது எப்படி விளையாட வேண்டும் என்று நினைத்தது உண்டு. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு என்னை என்னோடுதான் ஒப்பிட நினைத்திருக்கிறேன்.

என்று சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Published by:Sankar
First published:

Tags: Cricket, CSK, IPL 2020

அடுத்த செய்தி