எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் - ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  "எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும்" என்று சிஸ்கே வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

  சென்னை-டெல்லி அணிகள் மோதிய போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது.

  அந்த அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சென்னை அணி சார்பில் சாஹர், ஹர்பஜன் சிங், பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் , தாஹிர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

  148 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது சென்னை அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக டூ பிளசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி 81 ரன்களை சேர்த்தது. டூ பிளசிஸ் 39 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அவுட்டானார்.  இதையடுத்து அதிரடியாக விளையடிய வாட்சன் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக சென்னை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

  சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let's do it, ’ என்று பதிவிட்டுள்ளார்.  நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Also watch

  Published by:Prabhu Venkat
  First published: