Home /News /sports /

தென் ஆப்பிரிக்கா டி20 லீகில் அணிகளை வாங்க சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆர்வம்

தென் ஆப்பிரிக்கா டி20 லீகில் அணிகளை வாங்க சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆர்வம்

தென் ஆப்பிரிக்கா டி20 லீகில் அணியை வாங்கும் சிஎஸ்கே, மும்பை இண்டியன்ஸ்

தென் ஆப்பிரிக்கா டி20 லீகில் அணியை வாங்கும் சிஎஸ்கே, மும்பை இண்டியன்ஸ்

தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் டி20 லீக் தொடரில் அணிகளை வாங்க மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மற்றும் கெவின் பீட்டர்சன் தலைமை கூட்டமைப்பு ஒன்றும் ஆர்வம் காட்டி வருகின்றன.

மேலும் படிக்கவும் ...

    ஏற்கெனவே குளோபல் டி20 லீக் என்ற பெயரில் 2017- கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா முயன்றது, ஆனால் அது எடுபடவில்லை. பிறகு 2018, 2019-ம் ஆண்டுகளில் மசான்சி சூப்பர் லீக் என்று நடத்தியது ஆனால் இதுவும் எழும்பவில்லை. இந்நிலையில் ஐபிஎல்-க்கு அடுத்தபடியாக 2வது சிறந்த டி20 லீக் தொடரை நடத்த கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா முடிவு செய்துள்ளது.

    இதற்காக இந்தியர் ஆன சுந்தர் ராமன், அதாவது ஐபில் தொடரின் முன்னால் சி.ஓ.ஓ.வை நியமித்துள்ளது தென் ஆப்பிரிக்கா வாரியம். சுந்தர் ராமனுக்கு இதில் 12.5% பங்கு இருக்கிறது. பெரும்பங்கான 57% பங்குகளை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியமும் 30% பங்குகளை ஒளிபரப்பாளர் சூப்பர் ஸ்போர்ட்டும் வைத்துள்ளன. 10 ஆண்டுகளில் 56 மில்லியன் டாலர்கள் இதற்கு செலவாகும் என்றும் 10 ஆண்டுகளில் 30 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர ஒளிபரப்பு உரிமைக்காக சூப்பர் ஸ்போர்ட் 89 மில்லியன் டாலர்களைத் தர சம்மதித்துள்ளது.

    வருவாயில் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவும் அணி உரிமையாளர்களும் பாதிப்பாதி பங்கிட்டு கொள்வார்கள், இப்படியிருக்கும் போது இந்திய பணங்கொத்தி பறவைகள் பார்த்துக் கொண்டிருக்குமா என்ன? அதனால்தான் மும்பை, சிஎஸ்கே, ராஜஸ்தான், டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணிகள் அங்கும் ஒரு அணியை வாங்க திட்டம் தீட்டி வருகின்றன.

    தென் ஆப்பிரிக்கா அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஐசிசி தொடர்களையும் நடத்தவுள்ளது. இதனால் அதன் வருவாய் அதிகரிக்கும். 2027 ஐசிசி உலகக்கோப்பையை தென் ஆப்பிரிக்காதான் நடத்துகிறது. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் மேம்பாடு அடைந்தால் அது கிரிக்கெட்டுக்கு நல்லது, இல்லையெனில் வங்கதேசம் போன்ற மீடியாக்கர் அணிகளெல்லாம் மேலே வந்து பாடுபடுத்தும் என்பதே உண்மை. மாறாக ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஆப்கான் அணிகள் மேலே வந்தால் நல்லது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, CSK, IPL 2022, Mumbai Indians, South Africa

    அடுத்த செய்தி