ஐபிஎல்-ல சிஎஸ்கே தான் ஹீரோ - கே.ஜி.எஃப் வசனத்தை பேசிய ஹர்பஜன் சிங்

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஐபிஎல்-ல சிஎஸ்கே தான் ஹீரோ - கே.ஜி.எஃப் வசனத்தை பேசிய ஹர்பஜன் சிங்
ஐபிஎல்
  • News18
  • Last Updated: April 24, 2019, 6:53 AM IST
  • Share this:
ஐபிஎல்-ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ என்று சென்னை அணியின் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் சீசன் தொடரின் 41-வது லீக் போட்டியில் சென்னை-ஹைதராபாத் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 ரன்கள் எடுத்தார். சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், டுபிளிஸிஸ் களமிறங்கினர். டுபிளிஸிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுபுறம், ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடினார். அவர் 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அவுட்டானார். 19.5-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை அணி வெற்றி பெற்றது.


ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்இதையடுத்து சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஐபிஎல்-ல கிடைக்குற கோப்பைக்கு கௌரவம் இருக்கு அத எடுக்கிற கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு. ஆனா அந்த கோப்பையை அடிக்கறதுக்கு ஏற்கனவே சென்னைனு ஒரு டீம் இன்னைக்கு பிளே ஆஃப்ல கால் பதிச்சுட்டாங்கனு தெரிய படுத்த வேண்டிய நேரம். ஐபிஎல்-ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ’ என்று பதிவிட்டுள்ளார்


Also watch

First published: April 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்