விளையாட்டு

  • associate partner

“கடினமான சூழ்நிலையை கையாளக் கற்றுக்கொடுத்தது சி.எஸ்.கேதான்“ - தோனி உருக்கம்

IPL 2020 | CSK | MS Dhoni | மகேந்திர சிங் தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் முதல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

“கடினமான சூழ்நிலையை கையாளக் கற்றுக்கொடுத்தது சி.எஸ்.கேதான்“ - தோனி உருக்கம்
தோனி
  • Share this:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கி உள்ள தோனி, கடினமான சூழ்நிலையை கையாளும் கலையை கற்றுக்கொள்ள எனக்கு உதவியது சி.எஸ்.கே தான் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடர் வரும் 29-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பயின் மும்பை அணியும் - சி.எஸ்.கே அணியும் மோத உள்ளன. இந்த தொடரின் இறுதிப் போட்டி மே மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் முதல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. ஐ.பி.எல் தொடரில் தோனி விளையாடுவதை கண்டு ரசிக்க ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.


Also Read : ஐ.பி.எல் பரிசுத்தொகை பாதியாக குறைப்பு... பிசிசிஐ அதிரடி

சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், “இந்த பயணம் 2008-ல் தொடங்கியது. களத்திலும் களத்திற்கு வெளியிலும் ஒரு மனிதனாக, கிரிக்கெட் வீரராக எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையை கையாளும் கலையை கற்றுக்கொள்ள உதவியது“ என்றார்.

மேலும், “சென்னை ரசிகர்கள் யாரும் என்னை பெயர் சொல்லி அழைப்பதே இல்லை. தல என்று தான் அழைக்கிறார்கள். தல என்று அழைக்கும் போது அவர்கள் எனக்கு கொடுக்கும் மரியாதை, அன்பு தான் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது“ என்று தோனி கூறினார்.
First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading