முன்னாள் வீரரின் சிகிச்சைக்கு உதவிய சென்னை சூப்பர் கிங்ஸ்

ஜேக்கப் மார்ட்டினின் மருத்துவ செலவுக்காக பிசிசிஐ சார்பில் ரூ. 5 லட்சமும், பரோடா கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.2.70 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டது

முன்னாள் வீரரின் சிகிச்சைக்கு உதவிய சென்னை சூப்பர் கிங்ஸ்
ஜேக்கப் மார்ட்டினின் மருத்துவ செலவுக்காக பிசிசிஐ சார்பில் ரூ. 5 லட்சமும், பரோடா கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.2.70 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டது
  • News18
  • Last Updated: January 22, 2019, 9:10 PM IST
  • Share this:
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டினின் சிகிச்சைக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், குஜராத் மாநிலம், பரோடாவைச் (தற்போது வதோதரா) சேர்ந்தவருமான ஜேக்கப் மார்ட்டின், 2018, டிச.28-ம் தேதி சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.70,000 செலவு ஆகிறது.
46 வயதான மார்டினின் மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் அவரது மனைவி தவித்து வருவதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து பிசிசிஐ சார்பில் ரூ. 5 லட்சமும், பரோடா கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.2.70 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டது. இதேபோல் ரவி சாஸ்திரி, சவுரவ் கங்குலி, ஜாகிர் கான், முனாப் பட்டேல், யூசுப் பதான் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்களும் உதவி செய்வதாக தெரிவித்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருனல் பாண்டியா, மார்ட்டினின் சிகிச்சைக்காக எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருகிறேன் எனக்கூறி ‘பிளாங்க் செக்’ கொடுத்துள்ளார். மேலும் ஒரு லட்சத்துக்கு குறைவாக அதில் நிரப்பக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார் என்று பரோடா கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறியுள்ளார்

க்ருனல் பாண்டியா
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன், ‘ஜேக்கப் மார்ட்டினின் மருத்துவ செலவுக்காக சிஎஸ்கே அணி சார்பில் ரூ.3 லட்சம் வழங்கப்படும். ஜேக்கப் மார்ட்டினின் உடல்நிலை குறித்தும், மருத்துவ செலவுகள் குறித்தும் பரோடா கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டு வருகிறோம். அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்

also watch

First published: January 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்