முகப்பு /செய்தி /விளையாட்டு / ஜொகான்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி?

ஜொகான்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி?

தோனி

தோனி

கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவின் புதிய பெரிய டி20 லீகில் ரிலையன்ஸ் அணியை வாங்கி அதற்கு எம்.ஐ. கேப்டவுன் என்று பெயரிட்டுள்ளது, அதாவது கேப்டவுன் என்ற பிரதேசத்தை மையமாகக் கொண்டு இது செயல்படும், அதே போல் இந்த லீகில் சிஎஸ்கேவும் ஒரு அணியை வாங்கியுள்ளது, அதன் பெயர் ஜொகான்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்று இருக்கலாம் என்று செய்திகள் அடிபடுகின்றன, இதில் தோனி ஏதாவது ஒரு விதத்தில் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவின் புதிய பெரிய டி20 லீகில் ரிலையன்ஸ் அணியை வாங்கி அதற்கு எம்.ஐ. கேப்டவுன் என்று பெயரிட்டுள்ளது, அதாவது கேப்டவுன் என்ற பிரதேசத்தை மையமாகக் கொண்டு இது செயல்படும், அதே போல் இந்த லீகில் சிஎஸ்கேவும் ஒரு அணியை வாங்கியுள்ளது, அதன் பெயர் ஜொகான்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்று இருக்கலாம் என்று செய்திகள் அடிபடுகின்றன, இதில் தோனி ஏதாவது ஒரு விதத்தில் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பிறகுதான், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள் மற்றும் மற்ற உறுப்பினர்களை பற்றிய விவரம் தெரியவரும். “இந்த வாரத்தில் அதிகாரப்பூர்வ பெயர் உங்களுக்குத் தெரியும். ஒரு புதிய முயற்சியில் CSK-ஐ முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஸ்டீபன் ஃப்ளெமிங் உடன் நாங்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த தொடரில் தோனி பங்கேற்க பிசிசிஐயின் அனுமதி பெற வேண்டும். பிசிசிஐ அனுமதித்தால் ஏதாவது ஒரு பொறுப்பில் தோனி இருக்கலாம், ”என்று சிஎஸ்கே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளராகவும், எம்எஸ் தோனி வழிகாட்டியாகவும் இருக்கும் அணி ‘ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்’ என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே தவிர, மும்பை இந்தியன்ஸ் உட்பட மற்ற ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் மற்ற அணிகளுக்கான ஏலத்தை வென்றனர்.

என்ஓசிக்கான உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒப்பந்தம் இல்லாத வீரர்கள் அல்லது தங்கள் மாநிலங்களின் இடம்பெறாத வீரர்களை மட்டுமே வெளிநாட்டு டி20 லீக்குகளுக்கு அனுமதிப்பது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. அது நடந்தால், பல கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு லீக்குகளில் விளையாடத் தயாராகிவிடுவார்கள். இது குறித்து செப்டம்பர் மாதம் நடைபெறும் பிசிசிஐ ஏஜிஎம்மில் முடிவு எடுக்கப்படும்.

அந்த வகையில் ஐபிஎல் அல்லாத தொடரிலும் ஏதோ ஒருவிதத்தில் எம்.எஸ்.தோனி செயல்படுவார் என்பது தோனியின் ரசிகர்களுக்கு பெரிய வரப்பிரசாதம்தானே.

First published:

Tags: CSK, Dhoni, T20