ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘ரோஹித் சர்மா செஞ்சூரி அடிச்சு ரொம்ப நாளாச்சு…’ – முன்னாள் வீரர் விமர்சனம்

‘ரோஹித் சர்மா செஞ்சூரி அடிச்சு ரொம்ப நாளாச்சு…’ – முன்னாள் வீரர் விமர்சனம்

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மா சதம் அடித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

‘இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்த நீண்ட நாட்களாகி விட்டது’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விமர்சித்துள்ளார். இதே கருத்தை கிரிக்கெட் பிரபலங்கள் சிலரும் கூறியிருந்த நிலையில், ரோகித்சர்மா மீதான நெருக்கடி அதிகரித்து இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக ரோகித் சர்மா வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பரபரப்பான சூழலில் இந்த போட்டி கடைசி ஓவர் வரை சென்றதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இந்த ஆட்டம் அமைந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கிடையே ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. கடைசியாக 2021 செப்டம்பர் மாதம், இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அந்நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று இலக்க ரன்களை, அவர் எடுக்கவே இல்லை. இது சமீப காலமாக அவர் மீது வைக்கப்படும் கடும் விமர்சனம் ஆக மாறியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரரும், கிரிக்கெட் நிபுணருமான வாசம் ஜாபர் கூறியதாவது- ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவிற்கு அதிர்ஷ்டம் பெரிதாக கைகொடுக்கவில்லை. குறிப்பாக ரோகித் சர்மா செஞ்சுரி அடித்து நீண்ட நாட்கள் ஆகின்றன. இவர் சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் சதத்தை அவரால் எட்ட முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அந்த அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது. இதனால் இன்று இந்திய அணி தரப்பில் எந்த வீரரும் சதம் அடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்த போட்டியில் சதம் அடித்து நீண்டகால விமர்சனத்திற்கு ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

First published:

Tags: Cricket