ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரசிகரின் செல்போனை தட்டி விட்ட ரொனால்டோவிற்கு 2 போட்டிகளில் விளையாட தடை; ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகரின் செல்போனை தட்டி விட்ட ரொனால்டோவிற்கு 2 போட்டிகளில் விளையாட தடை; ரசிகர்கள் அதிர்ச்சி

ரொனால்டாவுக்கு 2 ஆட்டங்கள் விளையாட தடை

ரொனால்டாவுக்கு 2 ஆட்டங்கள் விளையாட தடை

ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், மான்ஸ்செஸ்டர் யுனைட்டட் அணி, எவர்ட்டன் அணியிடம் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

  போட்டிக்குப் பின்னர் அறைக்குத் திரும்பியபோது, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த ரொனால்டோ, தன்னை புகைப்படம் எடுத்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டார். இது குறித்து விசாரணை நடத்திய கால்பந்து கழகம் ரொனால்டோவுக்கு இந்திய மதிப்பில் 43 லட்சம் ரூபாய் அபராதமும், 2 போட்டிகளில் விளையாட தடையும் விதித்துள்ளது.

  உலகக்கோப்பை போட்டிகளுக்கு தடை பொருந்தாது எனவும், கிளப் அணிக்காக விளையாடும் போது தடைவிதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ரொனால்டோ, கடினமான நேரங்களில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது எளிதான செயல் அல்ல என குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்து அவர் இணையும் கிளப்-ல் இந்த தடை தொடரும் என கூறப்படுகிறது.

  இதையும் படிங்க: கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து.. களமிறங்கும் நட்சத்திர வீரர்கள்.. களைகட்டப்போகும் பிபா!

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Cristiano Ronaldo