விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் சேர்ந்திருக்கும் பேனருக்கு பெங்களூரு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ், கிரிக்கெட் ரசிகர்களால் ‘மிஸ்டர் 360 டிகிரி’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். கிரிக்கெட் பேட்டை வைத்து இப்படித்தான் ஷாட் அடிக்க வேண்டும் என்பதை உடைத்தெறிந்து எப்படி வேண்டுமானாலும் அடிக்கலாம் என்பதை செய்து காட்டியவர் டி வில்லியர்ஸ்.

35-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஏபி டி வில்லியர்ஸ். (PBL)
ஐ.பி.எல் டி-20 லீக் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு முதல் டி வில்லியர்ஸ் விளையாடி வருகிறார். தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடி வரும் அவர், நேற்று (பிப்.17) தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இதைக் கொண்டாடும் விதமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ரசிகர்கள், விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் சேர்ந்திருக்கும் பேனருக்கு பால் அபிசேகம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனான விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஜோடி 229 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். எ
திர்வரும் உலகக் கோப்பையில் விராட் கோலி மீதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இருக்கப்போகிறது.
ஓய்வை அறிவித்தார் ‘சிக்சா் மன்னன்’ கிறிஸ் கெய்ல்... அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.