ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு ஆடுவதை பெருமையாக நினைக்க வேண்டும்- தோனி அட்வைஸ்

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு ஆடுவதை பெருமையாக நினைக்க வேண்டும்- தோனி அட்வைஸ்

தோனி

தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ,கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் உயர் மட்டத்திற்குச் செல்வதற்கான முதற்படி என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ,கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் உயர் மட்டத்திற்குச் செல்வதற்கான முதற்படி என்று கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், முன்னாள் ஐசிசி தலைவரும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான என் சீனிவாசனுடன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தோனிபேசினார்:

“ஒரு மாவட்ட சங்கத்தின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியில் நான் முதல்முறையாக பங்கேற்கிறேன். நான் எனது மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு (ராஞ்சி) நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்பட வேண்டும். எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றதில் நான் பெருமைப்படுகிறேன், ஆனால் நான் எனது மாவட்டம் அல்லது பள்ளிக்காக விளையாடாமல் இருந்திருந்தால் அது நடந்திருக்காது.

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கான வழ்த்துகள். இது 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது, ஆனால் இன்றுதான் நாம் அதைக் கொண்டாடுகிறோம். எனக்கு ஆர்.என்.பாபாவை (TDCA செயலாளர்) மிக நீண்ட காலமாக தெரியும். அவருக்கு மட்டுமின்றி சங்கத்தில் உள்ள மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார் தோனி.

கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் , சதுரங்கம் , கால்பந்து , தடகளம் , மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு தோனி விருதுகளை வழங்கினார்.

First published:

Tags: CSK, Dhoni, MS Dhoni