ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பில்லை…

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பில்லை…

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் பந்துவீச்சாளர் ஷிவம் மாவி சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். இதில் அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன. முட்டுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியில் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனைகளுக்காக சஞ்சு சாம்சன் மும்பையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடாத நிலையில் ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக ராகுல் திரிபாதி ரன்களை குவித்திருக்கிறார். இதன் அடிப்படையில் அவர் 2ஆவது டி20 போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் பந்துவீச்சாளர் ஷிவம் மாவி சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். இதில் அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் பெற்றுள்ளார். பேட்ஸ்மேன்களில் தீபக் ஹூடா 41, அக்சர் படேல் 31 ரன்கள் எடுத்தனர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

ஹாக்கி உலகக் கோப்பை முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை வரை... 2023 ஆண்டின் முக்கிய விளையாட்டு போட்டிகள்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 162 ரன்களை எடுத்தது. 2ஆவதாக இலக்கை துரத்திய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 160 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக கேப்டன் தசுன் ஷனகா 27 பந்துகளில் 45 ரன்களை எடுத்தார்.

மைதானத்திலே சிகரெட் லைட்டர் கேட்ட ஆஸ்திரேலியா வீரர்: எதற்கு தெரியுமா?

2ஆவது டி20 போட்டி புனே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும்.

First published:

Tags: Cricket