கார் விபத்தில் படுகாயம் அடைந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், கூடுதல் சிகிச்சை இன்று மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளார். கார் விபத்தில் ரிஷப் பந்தின் நெற்றியில் 2 காயங்கள் ஏற்பட்டுள்ளன. வலது கால் மற்றும் வலது கை மூட்டிலும் காயங்க காணப்படுகின்றன. குதிங்கால், பாதம் மற்றும் முதுகிலும் விபத்தின்போது காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கூடுதல் சிகிச்சைக்காக ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு இன்று மாற்றப்படுகிறார்.
இந்த தகவலை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷியாம் சர்மா கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ‘விபத்து ஏற்பட்டதில் இருந்து ரிஷப் பந்தின் குடும்பத்தினருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவரது மூட்டின் இணைப்பில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனை குணப்படுத்த அவரை மும்பை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் 30ஆம் தேதி டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு அதிகாலையில் வந்த ரிஷப் பந்த் ரூர்க்கி அருகே சாலையின் டிவைடரில் மோதி படுகாயம் அடைந்தார். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் டேராடூன் மேக்ஸ் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அவர் குணம் அடைய ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ரிஷப் பந்த்திற்கு ஏற்பட்ட விபத்து கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய தகவலின்படி ரிஷப் பந்த்தால் சரியான முறையில் நடக்க முடியவில்லை என்று தெரியவருகிறது. மும்பையில் பிசிசிஐ மருத்துவர்கள் பந்த்திற்கு சிகிச்சை அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் முதுகுத் தண்டு, மூளை ஆகியவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
விதைக்கப்பட்ட கறுப்பு முத்து.. மக்களின் கண்ணீருடன் விடைபெற்ற பீலே..!
ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து மேலும் சில ஸ்கேன்கள் எடுக்கப்படவுள்ளன.
சிகிச்சை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர், அதன் பின்னர் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உள்ளிட்டவற்றில் பந்த் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Rishabh pant