ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரிஷப் பந்த்திற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை… அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தகவல்

ரிஷப் பந்த்திற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை… அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தகவல்

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்திற்கு செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சை சிறிய (மைனர் சர்ஜரி) அளவிலானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் நெற்றியில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை சிறிய அளவிலானது மட்டுமே என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் ரிஷப் பந்திற்கு இந்த சிகிச்சையை சுமார் ஃ மணி நேரமாக மேற்கொண்டனர். விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பந்த் தற்போது டேராடூனில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்வது குறித்து முடிவு ஏதும் இன்னும் எடுக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் ரிஷப் பந்த்தின் நலன் விரும்பிகள் நிம்மதி அடைந்துள்ளார்கள்.

டெல்லியில் இருந்து புறப்பட்ட ரிஷப் உத்தராகண்டின் ரூர்க்கிக்கு நேற்று சென்றுள்ளார். அங்குதான் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவரது கார் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ரூர்க்கியின் நார்சன் எல்லையில் ஹம்மத்பூர் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. வேகமாக வந்த கார், சாலையின் நடுப்பக்கம் வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி பற்றி எரிந்துள்ளது. இதில் ரிஷப்பின் முதுகு, கை, கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளன.

டெல்லியில் இருந்து கிளம்பிய ரிஷப், தனது தாயார் சரோஜ் பந்த்திற்கு, புத்தாண்டு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டில் சொல்லாமலேயே சென்றுள்ளார். இதனால் விபத்து ஏற்பட்ட பின்னர்தான், ரிஷப் தங்களை பார்க்க வந்திருப்பது அவரது குடும்பத்தினருக்கு தெரிந்துள்ளது. விபத்தை தொடர்ந்து ரிஷப் பந்திற்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக டேராடூன் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் நெற்றியில் அவருக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.

ரிஷப் பந்த் உடல்நிலை முன்னேற்றத்தை பிசிசிஐ கண்காணித்து வருகிறது. இதுபற்றி அதன் செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில், ‘கார் விபத்தில் காயமடைந்துள்ள ரிஷப் பந்த் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்து குறித்து அவரது குடும்பத்தினரிடமும், மருத்துர்களிடமும் பேசினேன்.

ரிஷப்பின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரிஷப்பின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை நாங்கள் கவனித்து வருகிறோம். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்’ என்று கூறியுள்ளார்.

நினைவுகள் 2022 : ரொனால்டோ மீதான பாலியல் வழக்கு முதல் நட்சத்திர வீரர்களின் ஓய்வு வரை.. ஜூன் மாதம் நடந்த முக்கிய நிகழ்வுகள்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடியிருந்தார். ஆனால் அவர் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

நினைவுகள் 2022: சென்னையில் செஸ் ஒலிம்பியாட்.. விம்பிள்டனில் அசத்திய நோவக் ஜோகோவிச்.. ஜூலை மாதம் நடந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு

பிப்ரவரியில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் ரிஷப் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது.

First published:

Tags: Rishabh pant