ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரிஷப் பந்த்திற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது… மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு…

ரிஷப் பந்த்திற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது… மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு…

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்திற்கு உடல் நிலை எப்போது குணமடையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கார் விபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக, சிகிச்சை பெற்று வரும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தடுத்து சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதையடுத்து கடந்த புதன்கிழமை, விமானம் மூலமாக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த்திற்கு உடல் நிலை எப்போது குணமடையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் அடுத்தடுத்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தற்போதைய சூழலில் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து காரில் தனி நபராக, ரிஷப் பந்த் உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு வந்துள்ளார். அதிகாலையில் அவர் வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானது இதில் படுகாயம் அடைந்த அவர், அரியானா அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டேராடூன் மருத்துவமனையில் ரிஷப பந்த்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

India vs Srilanka T20 : கடைசி டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி வீரர்கள் பட்டியல்…

இதையடுத்து கடந்த புதனன்று அவர் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிசிசிஐ அளித்துள்ள தகவலின்படி பந்த்திற்கு நெற்றியில் 2 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் புயல்.. காதலில் தென்றல்.. கபில் தேவ் க்யூட் காதல் ப்ரோபோசல்

முழங்கால் பாதம் மற்றும் முதுகிலும் ரிஷபத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாக பிசிசிஐ கூறியுள்ளது.

First published:

Tags: Rishabh pant