கார் விபத்திற்கு பின்னர் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் இன்று ட்வீட் செய்துள்ளார். உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகியுள்ளது. இந்த பதிவுக்கு பிரபலங்கள் பலரும் ரியாக்ட் செய்திருக்கிறார்கள். பிசிசிஐ மற்றும் அதன் செயலாளர் ஜெய் ஷாவை குறிப்பிட்டு ரிஷப் பந்த் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார். கடந்த மாதம் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து காரில் தனி நபராக, ரிஷப் பந்த் உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு வந்துள்ளார். அதிகாலையில் அவர் வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானது இதில் படுகாயம் அடைந்த அவர், அரியானா அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனரின் உதவியோடு பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டேராடூன் மருத்துவமனையில் ரிஷப பந்த்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதையடுத்து, விமானம் மூலமாக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய சூழலில் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரரான ரிஷப் பந்தின் வெற்றிடம் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், 3 ஃபார்மேட்டுகளிலும் ரிஷப் பந்த் அற்புதமான ஆட்டத்தை பெல முறை வெளிப்படுத்தியுள்ளார்.
விபத்தின்போது மூட்டில் படுகாயம் அடைந்த ரிஷப பந்த்திற்கு 3 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றில் 2 ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளன. அடுத்ததாக 6 வாரங்கள் கழித்து மேலும் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டியுள்ளது.
I am humbled and grateful for all the support and good wishes. I am glad to let you know that my surgery was a success. The road to recovery has begun and I am ready for the challenges ahead.
Thank you to the @BCCI , @JayShah & government authorities for their incredible support.
— Rishabh Pant (@RishabhPant17) January 16, 2023
இந்நிலையில் விபத்திற்கு பின்னர் முதன்முறையாக ரிஷப் பந்த் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘எனக்கு ஆதரவு அளித்து உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பணிவுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. நான் குணம் அடைந்து வருகிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிசிசிஐ, ஜெய் ஷா, அரசு அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. என்னுடைய ரசிகர்கள், அணி வீரர்கள், மருத்துவர்களுக்கும் நன்றி. உங்களுடைய அன்பான வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்தின. விரைவில் களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதை எதிர்பார்த்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket