குஜராத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அவரது மனைவிக்கு வாக்கு கேட்டு தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தேர்தல் நடக்கிறது. இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 8-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் குஜராத்தின் ஜாம் நகர் தொகுதியின் வேட்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா அறிவிக்கப்பட்டார். மேலும் அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிபேந்திர சிங் ஜடேஜா போட்டியிடுகிறார். எனவே, காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஜடேஜாவின் சகோதரி நைனாபா ஜாம் நகர் தொகுதியில் பிரசாரத்துக்காக களமிறக்கப்பட்டுள்ளதால் ஜாம் நகரில் தேர்தல் பரப்புரை பரபரப்பாகியுள்ளது.
જામનગરના તમામ લોકો પધારજો🙏🏻 જય માતાજી pic.twitter.com/WUZIAe8vhF
— Ravindrasinh jadeja (@imjadeja) November 27, 2022
இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவை படத்தை பயன்படுத்தி பாஜக கட்சியினர் வாக்கு சேகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய ஜெர்ஸி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்தது மிக பெரிய விமர்சனங்களை எழுப்பியது.
இதனையடுத்து தற்போது ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவிக்கு வாக்கு சேகரிக்க அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வாக்கு கேட்டுள்ளார். ஜடேஜா பதிவிட்டுள்ள பதிவில் ”ஜாம்நகர் மக்கள் அனைவரும் வாருங்கள் ஜெய் மாதாஜி” என பதிவிட்டுள்ளார். காயம் இன்னும் சரியாகவில்லை என வங்கதேச தொடரில் இருந்து விலகியுள்ள ரவீந்திர ஜடேஜா தற்போது தனது மனைவிக்காக பாஜகவுக்கு வாக்கு சேகரித்து வருவதாக ஜடேஜாவை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.