நான் முதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுத்ததற்காக முதல்வர்
மு.க.ஸ்டாலின் வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டமான நான் முதல்வன் என்கிற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டானலின் தனது பிறந்த நாளன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களின் ஆற்றல் மற்றும் திறைமையை மேம்படுத்துவதே ஆகும்.
நான் முதல்வன் திட்டத்திற்கு தமிழக வீரர் தங்கராசு நடராஜனும் கலந்து கொண்டார். இந்நிலையில் நான் முதல்வன் திட்டம் தொடர்பாக நடராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாணவர்களுக்கான இந்த அற்புதமான திட்டத்தின் தொடக்கத்தில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பளித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாணவர்கள் இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறேன் என்று முதல்வர் உடன் அவர் எடுத்த புகைப்படத்தை பகிரிந்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.