ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

''மறுபடி இந்திய அணிக்கு வருவேன்.. திரைப்படமாகும் வாழ்க்கை வரலாறு..’’ மனம் திறந்து பேசிய நடராஜன்!

''மறுபடி இந்திய அணிக்கு வருவேன்.. திரைப்படமாகும் வாழ்க்கை வரலாறு..’’ மனம் திறந்து பேசிய நடராஜன்!

சிவகார்த்திகேயன் -நடராஜன்

சிவகார்த்திகேயன் -நடராஜன்

என்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கட்டாயம் சிவகார்த்திகேயன் தான் நடிக்கிறார் என்றும் நடராஜன் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடி என்னுடைய முழு திறமையும் வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் பங்கேற்பேன் என தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், மாரத்தான் என்பது அனைவருக்கும் முக்கியம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாரத்தான் ஓட்டம் ஓட வேண்டும் உடல் வலிமையை மன வலிமை தைரியத்தை அதிகரிக்க மாரத்தான் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும் என கூறினார்.

அனைத்து விளையாட்டிற்கும் ஓட்டம் என்பது தேவைப்படுகிறது அதிகளவில் கிராமப்புறங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும் என்னை போல இன்னும் நிறைய இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை என்றார்.

இதையும் படிங்க: போர்ச்சுகல் பயிற்சியாளர் மீது ரொனால்டோ தோழி கடும் விமர்சனம்… வைரலாகும் இன்ஸ்டா பதிவு…

இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடுவேன் என்னுடைய திறமைகள் முழுமையும் வெளிப்படுத்தி கட்டாயம் இந்திய அணியில் மீண்டும் பங்கேற்று விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்த நடராஜன், என்னுடைய வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் கட்டாயம் எடுக்கப்படும் அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்னுடைய கிரிக்கெட் கேரியருக்கு பின்பு தான் இந்த படம் உருவாகலாம். கட்டாயம் அவர்தான் நடிப்பார் அவர்தான் தயாரிக்கவும் உள்ளார்’’ என்றார்.

First published:

Tags: Cricketer natarajan, Sivakarthikeyan