மம்தா கட்சியில் சேர்ந்தார் மேற்கு வங்க கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி

மம்தா கட்சியில் சேர்ந்தார் மேற்கு வங்க கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி

மம்தா கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் விரிர் மனோஜ் திவாரி.

மனோஜ் திவாரி சமீபமாக பிசிசிஐ மீதும் அதன் தேர்வு கொள்கை மீதும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்தார், மேலும் விவசாயப் போராட்டங்களுக்கான அயல்நாட்டு ஆதரவை எதிர்த்து சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், கோலி, ரஹானே, ரோஹித் சர்மா உட்பட பல வீரர்கள் ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்ததையும் சூசகமாக விமர்சனம் செய்திருந்தார்

  • Share this:
    மேற்கு வங்காள கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி. இந்திய அணியில் களம் இறங்கி சதம் அடித்த போதிலும் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இவர் மேற்கு வங்காள கிரிக்கெட் அணிக்காக அதிக அளவிலான முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.

    35 வயதான மனோஜ் திவாரி இன்று மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமயிலான ஆட்சி வருகிறது 30-ந்தேதி முடிவடைகிறது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் மனோஜ் திவாரி போட்டியிட வாய்ப்புள்ளது.

    மனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 287 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும். மூன்று டி20 போட்டிகளில் 15 ரன்கள் எடுத்துள்ளார்.

    ஹூக்ளியில் மம்தா பேரணியின் போது மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். இதை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘புதிய பயணம்’ தொடங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.

    முன்னாள் வீரர் லஷ்மி ரத்தன் சுக்லாவுக்கு ஒரு சரியான பதிலி மனோஜ் திவாரிதான் என்று ஏற்கெனவே திரிணாமுல் கூறியிருந்தது, மனோஜ் திவாரியை ஒரு மாதம் முன்னதாக திரிணாமுல் தொடர்பு கொண்டு கட்சியில் இணையுமாறு கேட்டுக் கொண்டது.

    தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரைச் சந்தித்த மனோஜ் திவாரி பிறகு மம்தாவை நேரில் சந்தித்து திரிணாமுல் கட்சியில் சேரும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

    மனோஜ் திவாரி சமீபமாக பிசிசிஐ மீதும் அதன் தேர்வு கொள்கை மீதும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்தார், மேலும் விவசாயப் போராட்டங்களுக்கான அயல்நாட்டு ஆதரவை எதிர்த்து சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், கோலி, ரஹானே, ரோஹித் சர்மா உட்பட பல வீரர்கள் ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்ததையும் சூசகமாக விமர்சனம் செய்திருந்தார் மனோஜ் திவாரி, அதாவது தான் இதுவரை பொம்மலாட்டம் பார்த்ததில்லை இப்போது பார்க்கிறேன் என்று வீரர்களை கிண்டல் செய்திருந்தார் மனோஜ் திவாரி.
    Published by:Muthukumar
    First published: