மனிதம் எங்கே? - சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்துக்காக கொதித்த ஹர்பஜன் சிங்கின் குரல்..

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு ட்விட்டரில் பலர் #JusticeforJayarajAndFenix என்ற ஹேஸ்டேகில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மனிதம் எங்கே? -  சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்துக்காக கொதித்த ஹர்பஜன் சிங்கின் குரல்..
ஹர்பஜன் சிங்
  • Share this:
சாத்தன்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மனிதம் எங்கே? என்று ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ், போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அவர்களை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.


சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி கேட்டு ட்விட்டரில் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சாத்தன்குளம் சம்பவத்திற்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம்.இனத்துக்காக, மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்.கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே“ என்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவானும் சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி கேட்டு ட்விட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading