Home /News /sports /

பாலியல் வன்கொடுமை: ஆஸி. கிரிக்கெட் வீரருக்கு 5ஆண்டுகள் சிறை!

பாலியல் வன்கொடுமை: ஆஸி. கிரிக்கெட் வீரருக்கு 5ஆண்டுகள் சிறை!

அலெக்ஸ் ஹெப்பர்ன் (இடது). (Getty Images)

அலெக்ஸ் ஹெப்பர்ன் (இடது). (Getty Images)

Cricketer #AlexHepburn sentenced to five years jail for rape of woman | அலெக்ஸ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று (ஏப். 30) தீர்ப்பு வழங்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
    தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹெப்பர்ன் (23). ஆல்ரவுண்டரான இவர், இங்கிலாந்தைச் சேர்ந்த வொர்செஸ்டர்ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணிக்காக 2015 முதல் 2017 வரை விளையாடி வந்தார்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரவு விருந்துக்குச் சென்ற அலெக்ஸ் நன்றாக மதுக்குடித்துள்ளார். பின்னர், சக வீரரின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    Alex Hepburn, அலெக்ஸ் ஹெப்பர்ன்
    அலெக்ஸ் ஹெப்பர்ன் (இடது). (Getty Images)


    இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அலெக்ஸ், பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிக்கியதால் அவரை அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு இங்கிலாந்தின் வொர்செஸ்டர்ஷைர் கிரவுண் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அலெக்ஸ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று (ஏப். 30) தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதில், தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹெப்பர்னுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கம்பீர், பாதுகாப்பற்ற பலவீனமான மனநிலையை உடையவர்: முன்னாள் பயிற்சியாளர் பகீர் தகவல்!

    ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் திடீர் விலகல்... பஞ்சாப் அணிக்கு புதிய சிக்கல்!

    ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் ஸ்மித்... ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான்...?

    ஐ.பி.எல் போட்டியில் விளையாட பஞ்சாப் அணிக்கு தடையா? வெளியானது பரபரப்பு தகவல்!

    Also Watch...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published:

    Tags: Australian, Cricketer, Rape case

    அடுத்த செய்தி