ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை லீக் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது.
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி யஷ்திகா பாடியா, மித்தாலி ராஜ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுரின் அரைசதங்களால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.
278 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு HAYNES - ALYSSA HEALEY இணை சிறப்பான தொடக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இவர்கள் 121 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்து வந்த மெக் லென்னிங்கும் தன் பங்கிற்கு ரன்களைக் குவித்தார். இதனால் 48 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் சேர்த்தது.
மேலும் படிங்க: IPL 2022 RCB-இனிமேல் தான் விராட் கோலி அபாயகரமானவராம், சொல்கிறார் மேக்ஸ்வெல்
97 ரன்கள் எடுத்திருந்த லென்னிங் 49-வது ஓவரில் ஆட்டமிழந்ததால் போட்டியில் விறுவிறுப்பு பற்றிக் கொண்டது. 4 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பவுண்டரி விளாசிய ஆஸ்திரேலியா, தனது 5-வaது வெற்றியை பதிவு செய்து பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. நூலிழையில் வெற்றியை தவறவிட்ட இந்திய அணி பட்டியலில் 4-வது இடத்தில் தொடர்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.