Home /News /sports /

தோனி செய்தது சரியா? இந்திய கிரிக்கெட்டின் சோகமான கதை இதுதான் - ஹர்பஜன் மனம் திறப்பு

தோனி செய்தது சரியா? இந்திய கிரிக்கெட்டின் சோகமான கதை இதுதான் - ஹர்பஜன் மனம் திறப்பு

ஹர்பஜன் - தோனி

ஹர்பஜன் - தோனி

ஹர்பஜன் 31 வயதில் 400 விக்கெட்டுகளை எடுத்திருந்தார், ஆனால் பலமுறை கவனிக்கப்படாமல் இருந்தார், இறுதியில் அவர் இந்திய அணியிலிருந்து சம்பிரதாயமற்ற முறையில் வெளியேற்றப்பட்டார். 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் இந்தியாவுக்காக 26 ஆட்டங்களில் மட்டுமே விளையாட முடிந்தது, மேலும் அவரை வெளியேற்றியதற்கு பிசிசிஐ அதிகாரிகளிடமும் அப்போதைய கேப்டனான தோனியிடமும் பதில் இல்லை என்று ஹர்பஜன் கூறினார்.

மேலும் படிக்கவும் ...

    ஹர்பஜன் தனது சம்பிரதாயமற்ற வெளியேற்றத்தைப் பற்றிப் பேசுகையில், அது தனக்கு விடை தெரியாத பல கேள்விகளை விட்டுச்சென்றதாகவும், எப்படி தன்னை அணியிலிருந்து நீக்க விரும்புகிறார்கள் என்பதை நினைவு கூர்ந்தார். அடுத்த ஐசிசி உலகக் கோப்பைக்கு முன் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் ஆடுவதற்கான வயதும், உடல் தகுதியும் பார்மும் இருந்து எப்படி ஒதுக்கப்பட்டனர் என்று கேட்கிறார் ஹர்பஜன் சிங்.

    31 வயது ஹர்பஜன் சிங், 30 வயது யுவராஜ் சிங், 32 வயது வீரேந்திர சேவாக், 2011ல் விளையாடிய 29 வயது கவுதம் கம்பீர், 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் விளையாடும் அளவுக்கு திறமையானவர்கள் இல்லையா? ஏன் ஒவ்வொருவராக அணியில் இருந்து நீக்கப்பட்டனர்? அவர்கள் ஏன் 'யூஸ் அண்ட் த்ரோ' போல நடத்தப்பட்டனர்? இது இந்திய கிரிக்கெட்டின் சோகமான கதை.

    2011-ல் எனக்கு 31 வயது, 400 விக்கெட்டுகளை எடுத்திருந்தேன். மேலும் 31 வயது வீரர் ஒருவர் ஒரே இரவில் 400 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது. அவர் ஏதாவது சரியாக செய்திருக்க வேண்டும். ஆம், நான் இந்தியாவுக்காக சில ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளேன், மேலும் ஒரு சில ஆட்டங்களில் மிகவும் மோசமாக விளையாடியுள்ளேன். அப்படித்தான் ஆட்டம் செல்கிறது.

    ஆனால், 400 விக்கெட்டுகளை வீழ்த்திய மற்றொரு வீரரை லெஜண்ட் என்று சொல்கிறார்கள், ஆனால் எந்த விளக்கமும் இல்லாமல் நான் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். எனக்கு பதில் சொல்ல தேர்வாளரும், பிசிசிஐ அதிகாரியும் இல்லை, என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கேப்டன் தோனி கூட என்னிடம் கூறினார்., இவ்வளவு பெரிய வீரரை நீங்கள் அப்படி நடத்தினால், எந்த வீரராலும் எதுவும் நடக்கலாம் என்பதை இது காட்டுகிறது, என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

    உண்மையில் ஏன் பெரிய வீரர்களையெல்லாம் தோனி 2015-ல் விலக்கினார் என்பது புரியாத புதிர்தான். இது எப்படி நடந்தது என்பது பற்றி, ஹர்பஜன் கூறியதை சீரியசாக எடுத்துக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, Dhoni, Harbhajan Singh

    அடுத்த செய்தி