• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ரோகித் சர்மா, ராகுல், கோலிக்கு ஒரே நேரத்தில் ஓய்வு இல்லை- பிசிசிஐ

ரோகித் சர்மா, ராகுல், கோலிக்கு ஒரே நேரத்தில் ஓய்வு இல்லை- பிசிசிஐ

கோலி, ஜடேஜாவுக்கு ஓய்வு.

கோலி, ஜடேஜாவுக்கு ஓய்வு.

“கிரிக்கெட் எவ்வளவு விளையாடப்படுகிறது என்பதைப் பொறுத்து எந்த வீரருக்கு ஓய்வளிக்க வேண்டும் என்பதை பிசிசிஐ முடிவு செய்யும். சோர்வு பிரச்சினையை நாங்கள் அறிவோம்" என்று பிசிசிஐ கூறியுள்ளது.

  • Share this:
    இந்திய அணி இம்மாத இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த அணியில் விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரூத்ராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐய்யர், யஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்தர் அஸ்வின், அக்ஷர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் பட்டேல், முகம்மது சிராஜ் ஆகிய இளம் வீரர்களுக்கு ரோகித் சர்மா தலைமையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் பணிச்சுமை பற்றியும் உலகக்கோப்பை டி20-யில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியதற்கும் பயோபபுள் களைப்பு, மூளை இழப்பு, களைப்பு ஆகியவை காரணங்களாகக் கூறப்பட்டன. இதனைக் கருத்தில் கொண்டு கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பிசிசிஐ தெரிவிக்கையில், “கிரிக்கெட் எவ்வளவு விளையாடப்படுகிறது என்பதைப் பொறுத்து எந்த வீரருக்கு ஓய்வளிக்க வேண்டும் என்பதை பிசிசிஐ முடிவு செய்யும். சோர்வு பிரச்சினையை நாங்கள் அறிவோம். ஏற்கனேவே ஓய்வில் உள்ள வீரருக்கு அணியில் இடம் கிடைக்கும். வீரர்களின் உடல்தகுதி விவரங்களை பயிற்சியாளர் ராகுல் திராவிட் சமர்ப்பிப்பார்.

    தொலைக்காட்சி ஒளிபரப்பாளரைக் கருத்தில் கொள்ள வேண்டும், இரண்டாவது அணியை ஒருபோதும் களமிறக்க முடியாது. டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் முதல் மூன்று முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரே தொடருக்கு ஓய்வு அளிக்க வாய்ப்பில்லை.

    இந்த மூன்று வீரர்களும் கடந்த ஜூன் மாதம் முதல் இந்திய அணியில் இருந்து விளையாடி வருகின்றனர். குறிப்பாக ரோகித் சர்மா, கோலி, பும்ரா மற்றும் ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள், இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் போதும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஐபிஎல் தொடரின் போதும் அதிரடியாக விளையாடி இருக்கின்றனர். இந்த இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும் ஒரே நேரத்தில் வழங்கப்படாது என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்கிறது பிசிசிஐ.

    இந்திய அணி இம்மாத இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தொடர்ந்து டிசம்பரில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு, பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அந்தத் தொடர் பிப்ரவரி 20 ஆம் தேதி முடிவடைந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, மார்ச் 18 வரை இந்தியா இலங்கையை எதிர்கொள்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: