ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி இன்று நீக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட இந்த அணிக்கு விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, துணை கேப்டனாக அஜிங்க்யா ரகானே இருந்து வந்தார். அவரிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டு துணை கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக டெஸ்ட் அணியில் ரவிந்திரா ஜடேஜா, அக்சர் படேல், சுப்மன் கில் ஆகியோர் இடம்பெறவில்லை. ஹனுமா விஹாரி, இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Also Read :
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மயங்க் அகர்வால் பாய்ச்சல்; அஸ்வின் ஆல்ரவுண்டராக 2வது இடம்
இந்திய டெஸ்ட் அணி விபரம் - விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (WK), விருத்திமான் சாஹா (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது. ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகம்மது சிராஜ்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் என்ற பொறுப்பில் 2023 உலகக்கோப்பை வரை ரோகித் சர்மா நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, இந்திய அணி தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தை ரத்து செய்யும் என்று தகவல்கள் பரவியது. ஆனால், தகுந்த பாதுகாப்பை மேற்கொண்டு, தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
Also Read :
ரசிகர்களுக்கு ‘பெரிய சர்ப்ரைஸ்’: யுவராஜ் சிங் வீடியோ மெசேஜ்
தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.