தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு 2 தலைமை பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான தகவல்கள் கடந்த சில நாட்களாக பரவி வந்த நிலையில் இன்று இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மேட்டுகளிலும் தென்னாப்பிரிக்க அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் புதிய பயிற்சியாளர்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷுக்ரி கோன்ராட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 4 ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான பயிற்சியாளராக ராப் வால்டர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான பயிற்சியாளராக மார்க் பவுச்சர் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக ராப் வால்டர் தென்னாப்பிரிக்க அணியின் உதவி பயிற்சியாளராக 2009 முதல் 2013-ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் வீரர் லான்ஸ் குளூஸ்னர் விண்ணப்பித்திருந்தார். அதனை அவர் திரும்ப பெற்ற நிலையில், ராப் வால்டரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் பயிற்சியாளராக அறிவித்துள்ளது.
டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளர் ஷுக்ரி கோன்ராட் நீண்ட அனுபவம் மிக்கவர். தென் ஆப்பிரிக்க தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும், 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராகவும கோன்ராட் செயல்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket