ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கனிட்கர் நியமனம்…

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கனிட்கர் நியமனம்…

ரிஷிகேஷ் கனிட்கர்

ரிஷிகேஷ் கனிட்கர்

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி நடப்பாண்டில் உலகக்கோப்பையை வென்றபோது அணியின் பயிற்சியாளராக கனிட்கர் இருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரிஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 9 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் இருந்து கனிட்கர் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார். 1997 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், கனிட்கர் இந்தியாவுக்காக 2 டெஸ்ட் மற்றும் 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் தர போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் இவர் குவித்திருக்கிறார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் பயிற்சியளித்து, தனது பணியில் குறிப்பிடத்தக்க அனுபவத்தை கனிட்கர்கொண்டுள்ளார்.. அவர் ரஞ்சி டிராபியில் கோவாவுக்கு பயிற்சியாளராக இருந்தார், பின்னர் தமிழ்நாட்டுடன் மூன்று பயிற்சியாளராக பணியாற்றினார்.

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி… இந்திய அணியில் 2 மாற்றங்களுக்கு வாய்ப்பு…

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி நடப்பாண்டில் உலகக்கோப்பையை வென்றபோது அணியின் பயிற்சியாளராக கனிட்கர் இருந்தார். சமீபத்தில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் VVS லக்ஷ்மனின் கீழ் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இந்த அணியிலும் பயிற்சியாளர் குழுவில் கனிட்கர் இடம்பெற்றிருந்தார்.

தற்போது மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் இருந்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்வதால், தனது தற்போதைய பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

WATCH – தென்கொரியாவை பந்தாடிய பிரேசில்… மேட்ச் ஹைலைட்ஸ்…

மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து கனிட்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்தப் புதிய பொறுப்பை எனக்கு கிடைத்த கவுரவமாக நான் கருதுகிறேன்.

மகளிர் கிரிக்கெட் அணியில் இளம் மற்றும் மூத்த வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக உள்ளது. எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வகையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்து வரக்கூடிய போட்டிகளில் மிகச் சிறப்பான திறமையை இந்த அணி வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket