Home /News /sports /

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கிரிக்கெட் வீரர் விளையாட தடை!

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கிரிக்கெட் வீரர் விளையாட தடை!

  • News18
  • Last Updated :
    வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர் நிகோலஸ் பூரண் நான்கு டி-20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டிஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 ஒரு நாள், 3 டி 20, ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டிஸ் அணி வென்றது. இந்நிலையில் 3-வது ஒரு நாள் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர் நிகோலஸ் பூரண் நான்கு டி 20 போட்டிகளில் விளையாட ஐ.சி.சி தடை விதித்துள்ளது.

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நிகோலஸ் பூரணுக்கு தண்டனையாக 2 டெஸ்ட் போட்டிகள் அல்லது நான்கு டி 20 போட்டிகள் அல்லது 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெஸ்ட் இண்டிஸ் அணி அடுத்து ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று டி 20 போட்டிகளில் விளையாட உள்ளதால் அந்த போட்டிகளில் நிகோலஸ் பூரணால் விளையாட முடியாது. அதேபோல் இந்தியாவிற்கு எதிரான முதல் டி 20 போட்டியிலும் அவரால் விளையாட முடியாது.

    இதுகுறித்து பேசிய நிகோலஸ் பூரண், ‘சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் தவறு செய்ததை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக ஐசிசி எனக்கு அளித்த தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். இது மறுபடியும் நடக்காது என்று உறுதியளிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Ball Tampering

    அடுத்த செய்தி