ரசிகர்களுக்கு அனுமதி இல்லை - பார்வையாளர்கள் இன்றி நடைபெறப்போகும் போட்டிகள்..!

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர்

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை - பார்வையாளர்கள் இன்றி நடைபெறப்போகும் போட்டிகள்..!
ஐபிஎல்
  • Share this:
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான மீதமுள்ள இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையே மார்ச் 15-ஆம் தேதி லக்னோவிலும், மார்ச் 18-ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ள இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனோ வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருவதால் இந்திய விளையாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று தரம்சாலாவில் நடைபெறவிருந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்