ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘இன்னும் 26 சதங்களை விராட் கோலி அடிப்பார்…’ – சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

‘இன்னும் 26 சதங்களை விராட் கோலி அடிப்பார்…’ – சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

விராட் கோலி

விராட் கோலி

இளம் வீரர்களை மிஞ்சும் வேகத்தில் விராட் கோலி ஓடுகிறார். இதன் அடிப்படையில் அவர் 40 வயது வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விராட் கோலி இன்னும் 26 சதங்களை அடிப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அனைத்து ஃபார்மேட் போட்டிகளிலும் விராட் கோலி 74 சதங்களை விளாசியுள்ள நிலையில் அவர் நிச்சயமாக மொத்தம் 100 சதங்களை அடிப்பார் என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- விராட் கோலிக்கு 34 வயது ஆகிறது. ஒருவேளை இன்னும் அவர் 5,6 ஆண்டுகள் விளையாடினால் நிச்சயமாக ஒட்டுமொத்தமாக 100 சதங்களை கடந்து விடுவார்.

விராட் கோலி 40 வயது வரை விளையாடுவார் என்று நம்புகிறேன். சச்சின் டெண்டுல்கர் தனது 40ஆவது வயது வரை விளையாடினார். அவர் ஃபிட்னஸையும் பராமரித்துக் கொண்டார். விராட் கோலியும் ஃபிட்னஸ் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார். ஆடுகளத்தில் மிக மிக வேகமாக ஓடக்கூடிய நபராக விராட் கோலி உள்ளார். தோனி விளையாடிக் கொண்டிருந்தால் அவர்தான் மிக வேகமாக ஓடக்கூடிய வீரர் என்று பாராட்டலாம்.

இப்போது இளம் வீரர்களை மிஞ்சும் வேகத்தில் விராட் கோலி ஓடுகிறார். இதன் அடிப்படையில் அவர் 40 வயது வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி நடந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 20 சதங்களை அடித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது. அதனை இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி , சச்சினின் சாதனையை சமன் செய்திருந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் சதம் விளாசி சச்சினின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். உள்ளூரில் நடந்த சர்வதேச போட்டிகளில் 20 சதங்கள் அடிப்பதற்கு சச்சின் 160 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டார். இதனை 99 இன்னிங்ஸ்களிலேயே சமன் செய்த கோலி, தனது 101 ஆவது இன்னிங்ஸில் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஒரே அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட , அதிகபட்ச சதம் என்ற அடிப்படையில், சச்சினின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 9 சதங்களே சாதனையாக இருந்தது. இதனை நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான சதத்தின் மூலம் கோலி முறியடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக கோலி இதுவரை 10 சதங்களை விளாசியுள்ளார்.

First published:

Tags: Cricket, Virat Kohli