ரிஷப் பந்திற்கு ஏற்பட்ட கார் விபத்து குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உருக்கமான மெசேஜை கூறியுள்ளார். டிசம்பர் 30-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்திற்கு கார் விபத்து ஏற்பட்டது. அவர் தற்போது டேராடூன் மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிரிக்கெட் விளையாட்டிற்கு ரிஷப் மீண்டும் திரும்புவதற்கு நீண்ட நாட்கள் ஆகக்கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
புத்தாண்டையொட்டி உத்தரகாண்டில் உள்ள சொந்த ஊரான ரூர்க்கிக்கு கடந்த 30ஆம் தேதி ரிஷப் பந்த் வந்து கொண்டிருந்தார். அம்மாவுக்கு சர்ப்ரைசாக இருக்க வேண்டும் என்பதற்காக யாரிடமும் சொல்லாமல் தனது விலை உயர்ந்த காரில் டெல்லியில் இருந்து புறப்பட்டு அவர் வந்துள்ளார். ரூர்க்கிக்கு அருகே அதிகாலை 5.30 மணிக்கு ரிஷப் பந்த் வந்த கார், சாலையில் உள்ள டிவைடரில் மோதி பற்றி எரிந்தது. அரை மயக்க நிலையில் சுதாரித்த ரிஷப், காரில் இருந்து வெளியேறினார்.
அவரைப் பார்த்த அரியானா அரசுப் பேருந்து டிரைவர், நடத்துனர் ஆகியோர் ரிஷப்பை முழுவதுமாக மீட்டு போலீசுக்கு தகவல் அளித்து முதல் உதவி சிகிச்சை பெற உதவி செய்தனர். இதையடுத்து டேராடூன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரிஷபின் நெற்றியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரிஷப் பந்தின் கார் விபத்து குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கபில் தேவ் பேசியதாவது- ரிஷப் பந்திற்கு ஏற்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் ஒரு பாடம். நான் தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாடியபோது பைக் விபத்தில் சிக்கினேன். அப்போது இருந்து, எனது சகோதரர் என்னை பைக்கை தொட விட மாட்டார்.
உலகக்கோப்பைக்கு வந்தால் ஐபிஎல் வேண்டாம்.. இந்திய வீரர்களுக்கு புது ரூல் போடும் பிசிசிஐ!
உங்களிடம் விலை உயர்ந்த அழகான கார் இருக்கலாம். அந்த கார் மிக வேகமாகவும் செல்லலாம். ஆனால் அதை விட உங்கள் உயிர் முக்கியம். உங்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் கார் வைத்துள்ளீர்கள் என்றால் அதைவிட டிரைவரை வைத்துக் கொள்வது மிக எளிதானது. நீங்கள் தனியாக காரை ஓட்டத் தேவையில்லை.
மனைவி அனுஷ்கா சர்மாவுடன் புத்தாண்டை கொண்டாடிய விராட் கோலி… 6 மில்லியன் லைக்ஸ் குவிந்தது…
ஆனால் சிலருக்கு கார் ஓட்டுவது பொழுதுபோக்காகவும், ஆர்வமாகவும் இருக்கும் என்பதை புரிந்து கொள்கிறேன். இந்த வயதில் துள்ளலாக இருப்பது இயற்கை தான். ஆனால் உங்களுக்கு பொறுப்புகள் பல உள்ளன என்பதையும் மறக்க வேண்டாம். உங்களை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Rishabh pant