இந்தியாவில் கிரிக்கெட் வெறும் ஆட்டம் மட்டுமல்ல, அதையும் தாண்டி புனிதமானது...:  நட‘ராஜ’ வரவேற்பு குறித்து சேவாக் பூரிப்பு

நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு

நடராஜன் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சின்னப்பம்பட்டி பிரிவு சாலையில் இருந்து சந்தைப்பேட்டை வரை அழைத்து செல்லப்பட்டார். செண்டை மேளம் முழங்க, வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் நடராஜனை வரவேற்றனர்.

 • Share this:
  ஆஸ்திரேலியா சென்று வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணியில் பங்களிப்பு செய்த யார்க்கர் நடராஜன் நாடு திரும்பியதையடுத்து குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சின்னப்பம்பட்டி பிரிவு சாலையில் இருந்து சந்தைப்பேட்டை வரை அழைத்து செல்லப்பட்டார்.

  டி-20 மற்றும் டெஸ்ட் தொடர்களின் வெற்றிக்கோப்பையை இந்திய கேப்டன்கள் நடராஜனிடம் வழங்கி கவுரப்படுத்தினர். அந்த அளவிற்கு, இந்திய அணியின் வெற்றிக்கு அவரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

  இந்நிலையில், தாயகம் திரும்பிய நடராஜன், மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்தார். பின்னர், கார் மூலமாக சேலம் வந்தடைந்தார்.

  அவரை வரவேற்பதற்காக சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏராளமான கிராம மக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்தனர்.

  நடராஜன் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சின்னப்பம்பட்டி பிரிவு சாலையில் இருந்து சந்தைப்பேட்டை வரை அழைத்து செல்லப்பட்டார். செண்டை மேளம் முழங்க, வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் நடராஜனை வரவேற்றனர்.

  இதுதவிர ரஹானேவுக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது நேற்று பாந்த்ராவில் விழாக்கோலம் கண்டது. இவையெல்லாம் கிரிக்கெட் என்பது இந்தியாவில் வெறும் விளையாட்டல்ல அதையும் தாண்டியது என்று முன்னாள் அதிரடி மன்னன் சேவாக் பூரித்துப் போயுள்ளார்.

  அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், வரவேற்க மாட்டீங்களா? இதுதான் இந்தியா, இங்கு இது ஒரு வெறும் ஆட்டம் மட்டுமல்ல. அதையும் தாண்டியது. நடராஜனுக்கு அவரது கிராமம் சின்னப்பம்பட்டியில் கிடைத்தது மாபெரும் வரவேற்பு, என்ன ஒரு பெருமைக்குரிய தருணம் என்ற தொனியில் பதிவிட்டுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: