ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

3-ஆவது டி20 போட்டியில் இந்தியா அசத்தலான வெற்றி… ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது…

3-ஆவது டி20 போட்டியில் இந்தியா அசத்தலான வெற்றி… ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது…

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்ய குமார் யாதவ்

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்ய குமார் யாதவ்

கோலி – சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் 3ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்ற 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

  முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 7 ரன்களில் வெளியேற, மறுமுனையில் சிக்சரும் ஃபோருமாக விளாசிய க்ரீன், 19 பந்துகளில் அரைச்சதம் அடித்தார். 21 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்சர், 7 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 27 பந்துகளில் 6 சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 54 ரன்களை சேர்த்தார்.

  இதன்பின்னர் 187 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது. தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் 1 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்னிலும் வெளியேறினர்.

  T20 உலகக்கோப்பை அணியின் பந்து வீச்சில் மாற்றம்?- இந்திய அணி நிர்வாகம் பரிசீலனை

  அடுத்து இணைந்த விராட் கோலி – சூர்யகுமார் யாதவ் ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கியதால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் 3ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்தனர்.

  36 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரிகளை விளாசிய சூர்ய குமார் யாதவ் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்களை எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆனார்.

  டிக்கெட் வாங்க தள்ளுமுள்ளு - ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

  1 பந்து மீதம் இருந்த நிலையில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டி, கோப்பையை வென்றது. 16 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்ட்யா 1 சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Cricket, India vs Australia