ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி…

வெற்றியைக்கொண்டாடும் தென்னாப்பிரிக்கஅணி வீரர்கள்

வெற்றியைக்கொண்டாடும் தென்னாப்பிரிக்கஅணி வீரர்கள்

தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 4 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 46 ரன்களை அதிரடியாக சேர்த்தார். 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் ரிஷப் பந்த் 27 ரன்களை எடுத்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

  தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் கொண்டு, மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ளது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில், இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

  இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்க வீரர்கள் குவின்டன் டி காக், ரோசோ ஆகியோர் அதிரடி ஆட்டம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 227 என்ற இமாலய இலக்கை எட்டியது.

  அதிகபட்சமாக ரோசோ 48 பந்துகளை சந்தித்து 8 சிக்சர் 7 பவுண்டரியுடன் சதம் அடித்தார். குவின்டன் டி காக் 43 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68 ரன்களை எடுத்தார்.

  இதன் பின்னர் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணி வீரர்கள் களம் இறங்கினர். கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

  விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஜோடி சற்று நேரம் அதிரடி காட்டியது. தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 4 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 46 ரன்களை அதிரடியாக சேர்த்தார். 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் ரிஷப் பந்த் 27 ரன்களை எடுத்தார்.

  இதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற, தீபக் சஹர் 31 ரன்களும், உமேஷ் யாதவ் 20 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 18.3 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

  அடுத்ததாக இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் லக்னோவில் தொடங்குகிறது. இரண்டாவது ஆட்டம் வரும் ஞாயிறு அன்று ராஞ்சி மைதானத்தில் மைதானத்திலும், கடைசி ஆட்டம் அக்டோபர் 11-ஆம் தேதி டெல்லி மைதானத்திலும் நடைபெறுகிறது.

  இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 1.30 – க்கு தொடங்கி பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது

  Published by:Musthak
  First published:

  Tags: Cricket